________________
102 'இந்து' தேசியம் பம்பாய்க்குச் சென்று ஜின்னாவைச் சந்தித்து தன்னுடைய கோரிக்கைக்கு ஆதரவு திரட்ட முயன்றார். 1947-இல் இந்தியா பெற்ற அரசியல் விடுதலையைப் பெரியார் ஏற்றுக் கொள்ளவில்லை. விடுதலை நாளைத் துக்க நாள் என்று அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கை சனாதன தர்மத்தின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. 'கிடைத்துள்ள விடுதலை சனாதன தர்மத்தைப் பாதுகாக்கவே செய்யும்' என்பது அவரது கருத்து. ராஜாஜி சென்னை முதலமைச்சரான போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஆணை (1924 முதலே) தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்தது. பின்னர் புதிய அரசியல் சட்டப்படி அது நீதிமன்றத்தால் • நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்துப் பெரியார் போராட்டத்தைத் தொடங்கியதன் விளைவாக இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் (1951) கொண்டு வரப்பட்டது. அதன்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சலுகைகளை மாநில அரசு வழங்கலாம் என்ற அனுமதியை அரசியல் சட்டம் மாநில அரசுகளுக்கு வழங்கியது. இத்திருத்தத்தை வட இந்திய காங்கிரஸ் மேல் சாதி உறுப்பினர்கள் எதிர்த்த போது, பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் அவர்களுக்குச் சென்னையில் பெரியார் நடத்தும் போராட்டத்தை நினைவுபடுத்தினார். உள் 1952-இல் மீண்டும் சென்னை முதலமைச்சரான ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் விளைவாக பாரம்பரியச் சாதித் தொழிலிருந்து பார்ப்பனரல்லாத சாதியார் மீள முடியாத ஒரு நிலை உருவாகும் என்பதைப் பெரியார் உணர்ந்தார். போராட்டங்களை அறிவித்தார். மறுபுறத்தில் காங்கிரசில் முரண்பாடுகள் பெரிதாகி ராஜாஜி பதவி விலகினார்.அவரைத் தொடர்ந்து முதலமைச்சரான காமராசரைப் பார்ப்பனியத்தின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் அரணாக விளங்கியவர் தந்தை பெரியார். இதன் விளைவாக அடுத்த பதினேழு ஆண்டுகாலம் காமராசரின் வலிமை காங்கிரசுக்குள் உயர்ந்து கொண்டே போயிற்று. இறுதியாகத் தமிழ்நாட்டு காங்கிரசுக்குள் பார்ப்பனியத்தின் பிடி தளர்ந்து மறைந்தது. N 1967 தேர்தலில் ராஜாஜியோடு கூட்டுச் சேர்ந்த காரணத்தால் வெற்றி வாய்ப்பைப் பெற்றிருந்த தி.மு.க.வைப் பெரியார் எதிர்த்தார்.) அதே ராஜாஜியோடு காமராசர் 1971-இல் தேர்தல் கூட்டுச் சேர்ந்த போது அவரையும் தந்தை பெரியார் எதிர்த்தார். எதிரியை அளந்து அறிந்து போர்த்தந்திரங்களை வகுக்கும் போர் வீரனைப் போல், அவர் வியூகங்களை மாற்றி வந்தார். போர்க்களத்துப் போர் வீரனைப் mps.7/t.me/tamiSOTருத்தினர் மீது அன்பு போலவே அவர் உறவு. பாசம்