உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

116 'இந்து' தேசியம் அம்பேத்கார் தலைமையிலானது, மற்றொன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.சி.ராஜா தலைமையிலானது) இடையில் ஏற்பட்ட ஒப்பந்தமாகக் கருதினார். எனவே ஒப்பந்தம் ஏற்பட்டதற்காக அவர் தனது 'இந்து நன்றிகளை' (Hindu gratitudes)அம்பேத்காருக்கும், எம்.சி.ராஜாவுக்கும் தனித்தனியாகத் தெரிவித்துக் கொண்டார்.' உண்மையில் ஒப்பந்தத்தில் உயர்சாதி இந்துக்களின் சார்பாகக் கையெழுத்து இட்டவர்களிலும் இரண்டு பிரிவினர் இருந்தனர். ஒரு பிரிவினர் காந்தியடிகளின் தலைமையை ஏற்று காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த இராஜாஜி. தேவதாஸ் காந்தி, இராசேந்திர பிரசாத் ஆகியோர். மற்றொரு பிரிவினர் இந்து மிதவாதத் தலைவர்கள் (Hindu Liberal Leaders) எனப்பட்ட பண்டித மதன் மோகன் மாளவியா, தேஜ் பகதூர் சாப்ரு. ஜி.டி.பிர்லா. எம்.ஆர்.ஜெயகர் ஆகியோர். இந்து மகாசபை என்ற அமைப்பு டாக்டர் பி.எஸ்.மூஞ்சே தலைமையில் இது போன்றதொரு ஒப்பந்தத்தை மூன்று மாதங்களுக்கு முன்னதாக அம்பேத்காரை எதிர்த்து நின்ற எம்.சி.ராஜாவோடு செய்து கொண்டிருந்தது, இந்த உண்ணாவிரதத்தையும் ஒப்பந்தத்தையும் பற்றி காந்தியடிகளின் பணியாளராக இருந்த பியாரிலால் ஒப்பந்தம் முடிந்த மூன்று மாதத்திற்கு உள்ளாக THE EPIC FAST என்ற ஆங்கில நூலை எழுதி வெளியிட்டார். இப்புத்தகத்திற்கு இராஜாஜி ஒரு முன்னுரை கொடுத்திருந்தார். இப்புத்தகத்தை ஒரு 'பாஸ்வெலியானா' என்று அம்பேத்கார் விமர்சித்தார்.? இதற்கு மாற்றாக டாக்டர் அம்பேத்கார் 1939-இல் புனா ஒப்பந்தம் என்ற நூலில் தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டார். 'புனா ஒப்பந்தத்திலிருந்து காங்கிரஸ் சாற்றை உறிஞ்சிக் கொண்டு சக்கையை, தீண்டத்தகாதவர் எனக் கருதப்படுவோரின் முகத்தில் வீசியெறிந்தது என்று கூறி இந்த நீண்ட சோகக் கதையினை முடிக்கலாம்' என்பது தான் அந்தப் புத்தகத்தின் கடைசி வாக்கியமாகும்.! இந்தியாவின் எதிர்கால அரசியல் -- சட்ட வரைவுக்காக இங்கிலாந்து அரசு ஒரு குழுவினை 1928-இல் அமைத்தது. ஜோக்கன் சைமன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவை காங்கிரஸ் இயக்கத்தினர் வன்மையாக எதிர்த்தனர். அதன் பின் விளைவாக இந்தியாவின் அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேச இங்கிலாந்து அரசு இலண்டனில் வட்டமேசை மாநாடு ஜனவரி 19 முடிய நடைபெற்ற இம்மாநாடே முதல் வட்டமேசை ஒன்றைக் கூட்டியது. 1930-ஆம் ஆண்டு நவம்பர் 12. முதல் 1931 மாநாடு ஆகும். காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் பலர் சிறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/117&oldid=1669805" இலிருந்து மீள்விக்கப்பட்டது