________________
118 'இந்து' தேசியம் பேராளர் (Viceroy) இர்வினைச் சந்திக்கிறார். மார்ச் 4ஆம் தேதி இருவருக்கும் ஒப்பந்தம் நடக்கிறது. காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைக்கிறார். இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள காங்கிரஸ் உடன்படுகிறது. இரண்டாம் வட்டமேசை மாநாடு தொடங்குவதற்கு முன்னர் ஆகஸ்டு 14இல் காந்தியடிகளின் வேண்டுகோளின் பேரில் அவரை அம்பேத்கார் பம்பாயில் சந்திக்கிறார். இரண்டாம் வட்டமேசை மாநாடு செப்டம்பர் 12இல் தொடங்குகிறது. மாநாட்டில் தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதிகளாக மீண்டும் அம்பேத்காரும். ரெட்டமலை சீனிவாசனும் கலந்து கொள்கின்றனர். காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து காந்தியடிகள், இந்துக்களின் தலைவர்களாக பண்டித மதன்மோகன் மாளவியா, கஸ்தூரி ரங்க ஐயங்கார் முதலியோர் கலந்து கொள்கின்றனர். 1931ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் அன்று நடைபெற்ற கூட்டமைப்புக் குழுவில் (Federal Structure Committee) முதற் கூட்டத்தில் பேசும் போது தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதிக் கோரிக்கையை காந்தியடிகள் எதிர்த்தார். 'இந்தியா முழுமையிலும் உள்ள எந்த ஒரு அங்கத்தின் அல்லது தனி நபரின் நலன்களைப் போலவே தீண்டத்தகாதவர்கள் எனக் கருதப்படுபவர்களின் நலன்களும் காங்கிரசுக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஆதலின் அவர்களுக்கு மேலும் அதிகப்படியான எந்த விதமான சிறப்புப் பிரதிநிதித்துவத்தையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன்' என்பது அவர் தம் வெளிப்படையான வாதமாகும். அதே கூட்டத்தில் அன்று மாலையில் பேசிய டாக்டர் அம்பேத்கார் இதனைக் கடுமையாக எதிர்த்தார். அம்பேத்காரின் கடுமையான எதிர்ப்பினைக் கண்ட காந்தியடிகள் இந்தியக் குழுக்களிடையே ஒரு சமரசத்தை எட்டுவதற்காகக் கூட்டத்தை சில நாட்கள் ஒத்தி வைக்க பிரிட்டானியப் பிரதமரை வேண்டிக் கொண்டார். இந்த வேண்டுகோளை முஸ்லீம்களின் பிரதிநிதியான சர் அலிஇமாமும், இந்து மிதவாதிகளின் பிரதிநிதிகளான பண்டித மதன்மோகன் மாளவியாவும் ஆதரித்தனர். இந்தக் கால அவகாசத்தில் காந்தியடிகள் முஸ்லீம்களோடு ஒரு சமரச ஒப்பந்தத்தை உருவாக்கப் போகிறார் என்பதை டாக்டர் அம்பேத்கார் உணர்ந்து கொண்டார். எனவே தன் கருத்தை அவர் ஆணித்தரமாகக் கூறத் தொடங்கினார். 'சமரசப்பேச்சு வார்த்தையை மேற்கொள்பவர்கள் தாங்கள் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு சிறுபான்மையினர் குழுவினால் முன் அதிகாரம் அளிக்கப்பட்டு