________________
128 'இந்து' தேசியம் சாராபாய் அவரது குடும்பத்தினர், நேருவின் தாயார் சொரூபராணி நேரு ஆகியோர் அங்கிருந்தனர். மேற்குறித்த செய்திகள் அனைத்தும் நிகழ்ச்சிகளை நேரில் கண்டவரான பியாரிலால் எழுதிய நூலில் 42 பக்கங்களில் (பக்.40-81) வருணிக்கப்பட்டுள்ளன.?? இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட சூழ்நிலையைக் குறித்து சில ஆண்டுகள் கழித்து டாக்டர் அம்பேத்கார் பின்வருமாறு எழுதுகிறார். இயற்கையாக அந்த நேரத்தில் நாயகனாக (Man of the moment) அல்லது 'கதையின் வில்லனாகக் (Villain of the piece) கருதி அனைத்துக் கண்களும் என் பக்கம் திரும்பின. இரு மாறுபட்ட முடிவுகளிடையே ஒன்றினை நான் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. காந்தியடிகளை நிச்சயம் சாவிலிருந்து காப்பாற்றுவதற்கு பொது மனிதத்தன்மையின் ஒரு பகுதியாக இயங்கி வந்த அந்தக் கடமை என் முன்னாலிருந்தது. தீண்டத்தகாதவர் எனக் கருதப்படுகிறவர்களுக்குபிரதமர் அளித்திருந்த அரசியல்உரிமைகளைக் காக்கும் பிரச்சினையும் என் முன்னாலிருந்தது. மனிதத் தன்மையின் அழைப்புக்குக் குரல் கொடுத்து. திரு.காந்தியடிகளுக்கு திருப்தியான வகையில் இனப்பிரதிநிதித்துவத் தீர்ப்பினைத் திருத்தியமைக்க ஒப்புக் கொண்டு திரு.காந்தியின் உயிரைக் காப்பாற்றினேன்'என்கிறார் அம்பேத்கார், 23 செப்டம்பர் 24ஆம் தேதி மாலை ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டது. பொதுத் தொகுதியில் தனித்தொகுதி முறையைக் கைவிடுவது என்பதும், இனவாரித் தீர்ப்பின்படி கிடைத்த 68 இடங்களுக்குப் பதிலாக 148 இடங்களைத் தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்குவது என்பதும் ஒப்பந்தத்தின் சாரம் ஆகும். இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் தங்களுக்கு இனவாரித் தீர்ப்பின் மூலம் கிடைத்த இரட்டை வாக்குரிமையை இழந்து விடுகின்றனர். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோர்களில் அம்பேத்கார், எம்.சி.ராஜா, சாப்ரு, மாளவியா ஆகியோர் பெயரால் உடனடியாக இங்கிலாந்துக்கும் டெல்லிக்கும் தந்திகள் டெல்லிக்கும் தந்திகள் அனுப்பப்படுகின்றன. ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாள், செப்டம்பர் 25ஆம் தேதி பம்பாய் வணிகர் சங்க கட்டிடத்தில், கையெழுத்திட்ட தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அன்றும் சிலர் பம்பாய் நகரில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். உண்ணாவிரதத்தை முடித்தவுடன் காந்தியடிகள் தாழ்த்தப்பட்டோர் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அம்பேத்கார், ரெட்டமலை சீனிவாசன் ஆகியோருக்கும் எம்.சி.ராஜா குழுவினருக்கும் தனித்தனியே நன்றி தெரிவித்திருந்தார்.