உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தல தல இதயெர்பவனி கடுப்ப நூல் மதிப்புரை கோ தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடிய பயணம் * நமுருகேசபாண்டியன் எக்ஸ் ஃ பிதைப்பும் இரண்டாயிரமாண்டு வரலாற்று பின்புலத்தில் தமிழ் அடையாளமானது இன்று வரை தனித்து விளங்குகின்றது. பாமர மக்களின் வாழ்க்கையில் அன்றாடம் வெளிப்படும் தமிழ் மரபின் கூறுகள் பற்றி யோசிக்க வேண்டிய நேரமிது. உலகமயமாக்கல் காலகட்டத்தில், நுகர்பொருள் பண்பாட்டில் எல்லாம் ஒற்றைத்தன்மையுடையதாக மாறிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழின். வேர்களைக் கண்டறிய வேண்டியுள்ளது. இத்தகு சூழலில் பல்லாண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றிய தொ.பரமசிவன் தமிழர் வாழ்க்கையினூடாகப் பயணித்துக் கண்டறிந்தவை; பண்பாட்டுத் தகவல்களாக விளங்குகின்றன. தமிழ்ப் பண்பாட்டின் :வேர்களைத் தேடியலையும் பரமசிவன். பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பெற்று 'உரைகல்' என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளன. பண்டைய இலக்கியத்தை ஆழ்ந்து வாசிப்பதுடன் சமகாலத்திய வாழ்க்கையினை நுட்பமாக அவதானித்துக் கண்டறிந்தவற்றைச் சுவாரசியமான மொழியில் சொல்வது ப்ரமசிவத்தின் தனித்துவமாகும். நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், தொல்லியல் ஆய்வுகள்; இலக்கிய மேற்கோள்கள், அண்மைக்காலச் செய்திகள் எனப் பல்வேறு தளங்களின் வழியாக ஆதாரத்துடன் விவரிக்கப்பட்டுள்ளவை, நேரடியாகக் கேட்பது போன்ற தொனியில் அமைந்துள்ளன. மொழிப் பேராசிரியர் என்றால் கல்வியியல் சார்ந்து ஒடுங்கியிருக்கும் சூழலில், தமிழ்ப் பண்பாட்டினை முன்னிறுத்திய . பேராசிரியரின் பேச்சுகள் - இன்றைய காலகட்டத்தின் தேவையாக உள்ள முன்னுரை. மதிப்புரை, நேர்காணல், மேடைப்பேச்சு, கட்டுரை எனப் பல்வேறு வடிவங்களில் பேராசிரியர் விவரித்தாலும். அவை தமிழ்ப் பாரம்பரியத்தின் பன்முக அம்சங்களை மையமாகக் கொண்டுள்ளன. பெரும் மரபும் பு ாக உள்ளன. புத்தக பும் புதுமையும் என பரமசிவன் விளக்குவது தமிழரின் இருப்பு குறித்த விசாரணையாகும். இயற்கையுடன் சார்ந்து வாழ்ந்த தமிழர் வாழ்க்கையில் தோப்புகளும் துரவுகளும் நீர்நிலைகளும் வயல்களும் எனச் சூழல் மாசுபடாமல் இருந்தன. இன்று வேதியியல் உரங்களும் பூச்சிக்கொல்லிகளான நஞ்சுகளும் நிலத்தை மலடாக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/144&oldid=1669836" இலிருந்து மீள்விக்கப்பட்டது