பக்கம்:இந்து தேசியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 'இந்து' தேசியம் இந்து என்ற சொல் நமக்கானது இல்லையென்றால் இதற்கான பழைய சொல் என்னவாக இருக்கும்? நம்முடைய நாட்டிலே இந்து என்ற சொல் சிந்து நதிக்கு இந்தப்புறம் வாழுகிற மக்களைக் குறிப்பதற்கு வெள்ளைக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட சொல். நம்முடைய நாட்டிலே என்ன வகையான பழைய இனப்பாகுபாடு எனக்கேட்டால், 'ஆரிய' என்ற ஒரு சொல் இருக்கிறது. 'திராவிட' என்று ஒரு சொல் இருக்கிறது. இந்தச் சொற்கள் இரண்டு மொழிக் குடும்பங்களைச் சார்ந்த மக்களைக் குறிக்கின்றவை ஆகும். இந்த இரண்டும் தனித்தனியே தம்மிலே வேறுபட்டவை. ஆரிய மொழிகளைப் பேசுகிறவர்களுக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது. திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசுகிற மக்களுக்கென்று ஒரு கலாச்சாரம் உண்டு. இந்த இரண்டு சொற்களுக்குத்தான் மிகப் பழைய அங்கீகாரம் உண்டு. நம்முடைய சங்க இலக்கியத்திலேயே 'ஆரியம்' என்ற சொல் வந்திருக்கிறது. வடநாட்டுக்காரர்கள் என்ற பொருளில், "ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்" என்று வந்திருக்கின்றது. திராவிடம் என்ற சொல்லை 13ஆம் நூற்றாண்டில் இருந்து முதலிலே வடமொழி நூல்களிலேதான் தென்னகத்து மக்களைக் குறித்து வழங்கியிருக்கிறார்கள். அந்தச் சொல் தமிழ்நாட்டில் உருவான சொல்லாகத் தெரியவில்லை. ஆனால் திராவிட மொழி பேசுகிற தென்னாட்டு மக்களைக் குறிக்கக் கூடியதாகவும், தமிழ் மொழியைக் குறிக்கக் கூடியதாகவும் இந்தச் சொல் பலமுறை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ உரையாசிரியர்களைக் கேட்டால் 'திராவிட. உபநிஷத்' என்று தான் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைச் சொல்வார்கள். வேதம் பஹீவிதம். இதில் 'ஆரியம், திராவிடம் என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே' என்பார் 13ஆம் நூற்றாண்டிலே ஒரு வைணவ உரையாசிரியர். ரிக், யஜுர், சாமம் போலேதான் ஆரியம், திராவிடம் என்ற பிரிவு என்பது இதன் பொருளாகும். திராவிட இயக்கம் பிறப்பதற்கு முன்வரை தென்னிந்தியபிராமணர்கள் பஞ்ச திராவிட பிராமணர்கள்' என்றுதான் தங்களை அழைத்துக் கொண்டனர். என்று இரவீந்திரநாத் தாகூர், 'பஞ்சாப சிந்து குஜராத மராட்ட திராவிட' 'திராவிட' என்ற சொல்லாலே குறிக்கிறார். Scanned with CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/19&oldid=1536203" இலிருந்து மீள்விக்கப்பட்டது