தொ.பரமசிவன் 35
மற்ற மடங்களைப் போல இவர்களுக்கு வேறு எங்காவது கோயில் இருக்கிறதா என்றால் இல்லை. இவர்களுக்கும், கோயில் வழிபாட்டுக்கும் சம்பந்தமே கிடையாது. காமாட்சியம்மன் கோயில் இவர்களுக்குப் பங்கிடும் பொழுது கிடைத்த சொத்து. அவ்வளவுதான்.
காமகோடி என்றால் என்ன பொருள்?
காஞ்சிபுரத்திலிருக்கிற காமாட்சியம்மன் கோயில் மிகமிகப் பழமையானது. அதற்குக் காமகோட்டம் என்று பெயர்
"கச்சி வளைக்கச்சி காமக்கோட்டம் தன்னில்
மெச்சி இனிதிருக்கும் மெய்ச்சாத்தன் - கைச்செண்டு"
என்பது 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தனிப்பாடல் ஆகும்.
இன்று வரை காமாட்சியம்மன் சன்னதிக்குப் பின்னால் ஒரு சாத்தனார் (ஐயனார்) சன்னதி உள்ளது. ஐயனார் வழிபாடு என்பது பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு உரியது. காமாட்சியம்மன் கோயில் தாய் வழிபாட்டு நெறிகளுக்குட்பட்டது. காமக்கோட்டம் என்ற ஒன்பதாம் நூற்றாண்டுத் தாய்த் தெய்வக்கோயில்களுக்குரிய பெயரையே பார்ப்பனர்கள் தன்வயமாக்கி, (Assimilate) காமகோடி என்று வடமொழிப்படுத்தினார்கள். காமம் (விருப்பம்) என்பது திராவிட மொழிகளின் வேர்ச்சொல்லாகும். '
காஞ்சிமடத்தை மூல மடம் என்று சொல்கிறார்களே?
ஆதிசங்கரர் நிறுவியதாக சொல்லப்படுபவை. நான்கு மடங்கள்தாம். (சிருங்கேரி, துவாரகை, பூரி, பத்ரிநாத்). இந்த நான்கு மடங்களுக்கு அப்பாலே இவர்கள் கற்பனையாகக் கூறியதுதான் காஞ் சிமடம், சங்கரர்பிறந்த காலடியில் கூட மடம் கிடையாது. சங்கரர் உருவாக்கிய மடம் நான்குதான். இவர்கள் பொய் சொல்வதற்காக சமஸ்கிருத மொழியில் ஆதாரங்களை உருவாக்கினார்கள். இதை மறுத்து அருமையான நூல்களை மூன்று பிராமணர்கள் எழுதியுள்ளனர். முக்கியமான புத்தகம் 'காஞ்சி காமகோடி பீடம் ஒரு கட்டுக்கதை' மடக்கி, பழைய சங்கராச்சாரியார் அவரிடம் தோற்றுப் போயிருக்கிறார். அவர் பலமுறை மறைந்த சங்கராச்சாரியாரை நேருக்குநேர் கேட்டு வாரணாசி ராஜகோபால் சர்மா என்பவர் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இவர்கள் . மடமல்லாத மடம் என்பதனாலே ஒரு கிளை மடத்தைத் தனிமடம் என்று காட்டுவதற்காக, மூல ஆம்னாய மடம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். சங்கரர் பிறந்த காலடியில் போய்க் கேட்டுப் ள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சிருங்கேரி மடத்தில்
பாருங்கள். அவர்கள் போய்க் கேட்டுப் பாருங்கள், உள்ளே நுழைய விடமாட்டார்கள்.