பதிப்புக் குறிப்பு
சிவக்குமரன் என்கிற புனைப்பெயரில் தொ.பரமசிவன். அவர்களால் எழுதப்பட்ட நான் இந்துவல்ல நீங்கள்..?, ‘இந்து’ தேசியம், சங்கர மடம் - தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள், இதுதான் பார்ப்பனியம், புனா ஒப்பந்தம் - ஒரு சோகக் கதை ஆகிய நூல்கள் சிறு வெளியீடுகளாக யாதுமாகி பதிப்பகத்தால் (லேனா குமார்) முதலில் வெளியிடப்பட்டது.
பின்னர், மணி பதிப்பகம் தொ. பரமசிவன் என்ற பெயரிலேயே நான் இந்துவல்ல நீங்கள்..? இந்து தேசியம், இதுதான் பார்ப்பனியம் ஆகிய நூல்களை மீண்டும் வெளியிட்டது.
தற்போது கலப்பை பதிப்பகம் இவை அனைத்தையும் சேர்த்து ‘இந்து’ தேசியம் என்ற தலைப்பில் ஒரே நூலாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் தா. செ. மணி அவர்களின் அணிந்துரையோடு வெளியிடுகிறது.
பின்னிணைப்பாக கலப்பை பதிப்பகம் ஏற்கெனவே வெளியிட்ட தொ.பரமசிவனின் ‘உரைகல்’ நூலுக்கு ந. முருகேசபாண்டியன் அவர்கள் ‘இந்திய டுடே’ இதழில் எழுதிய மதிப்புரை இணைக்கப்பட்டுள்ளது.