உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தொ.பரமசிவன் 39

பிராமணர்களுக்கு மட்டும்தான் அனுமதி. கேரளத்திலே இதை உடைத்து விட்டார்கள். கேரளத்திலே மற்ற சாதியினர் வேதம் படித்துவிட்டனர். இதனால்தான் உச்சநீதிமன்றம் அண்மையிலே (ஒரு வருடத்திற்கு முன்னால்) வேதம் படித்தவர்கள் பிறப்பினால் எந்த சாதியாக இருந்தாலும், கோயிலில் அர்ச்சகராகலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டிலே பார்ப்பனர்கள் மட்டும்தான் முறையாக வேதம் படித்தவர்கள். தமிழ்நாட்டில் இருக்கிற வேதப் பாடசாலைகள் எல்லாமே நூற்றுக்கு நூறு பிராமண மாணவர்களாகக் கொண்டு இயங்குகிற கல்வி நிறுவனங்கள்தாம் உள்ளது. வேறு எந்தச் சாதியாரும் தங்கள் சாதிக்கு மட்டும் சாதி ஆசாரத்திற்கு மட்டும் என்று ஒரு கல்வி நிறுவனத்தை நடத்த முடியுமா? சிந்தித்துப் பாருங்கள்.

அப்பொழுது, வேத வளர்ச்சி என்றால் பிராமண வளர்ச்சி தானா?
ஆம், வேத வளர்ச்சி என்றால் பிராமணர்களின் வளர்ச்சிதான். தனக்கென்று ஒரு கல்வித் திட்டத்தை உருவாக்கி மற்றவர்களுக்குப் பிறப்பினால் அதை மறுக்கின்ற சாதி நாட்டிலே வேறு எதுவும் கிடையாது. இது ஒன்றுதான்.
இவர்கள் மட்டும்தான் இப்படி வைத்துக் கொள்ளவும் முடியும். தாக்குப் பிடிக்கவும் முடியும்.
வேதங்கள் தெய்வங்களை ஒப்புக் கொள்ளவில்லையா?
வேதப்பாடல்கள் பல்வேறு வகையான தெய்வங்களைப்_பேசின. தெய்வங்கள் சமூகத்தின் தேவை கருதி சில மாறிவரும். சில செத்துப் போகும். வேத காலத் தெய்வங்கள் அநேகமாக எல்லாமே செத்துப் போய்விட்டன. ஏனென்றால் அவை பார்ப்பனர்களுக்கு மட்டும் உரியன. அவர்களுக்கு உருவ வழிபாடு கிடையாது. பார்ப்பனர்கள் என்றால் சிவப்பிராமணர்களையும், வைணவப் பிராமணர்களையும் சொல்லவில்லை, சங்கர வேதாந்திகளான ஸ்மார்த்தப் பிராமணர்களுக்கு உருவ வழிபாடு கிடையாது. மூத்த ஆசிரியர் சமாதியை மட்டும் கோபுரத்தைப் பார்த்தால் நாம் கன்னத்தில் போட்டுக் கொள்வோமே வணங்குவார்கள். அதற்கு 'அதிஷ்டானம்' என்று பெயர். தவிர கோயில் அதுமாதிரி இவர்கள் செய்ய மாட்டார்கள்.

காஞ்சி மடாதிபதி கோயில்களுக்கு எல்லாம் வருகிறாரே?
கோயில்களுக்கும் இவர்களின் வேதாந்தத்திற்கும் உறவே கிடையாது. ஒருகாலத்தில் ஆனந்தவிகடன், அப்புறம் கல்கி, கலைமகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/40&oldid=1677656" இலிருந்து மீள்விக்கப்பட்டது