42 'இந்து' தேசியம்
இறைவன் ஒருவன் உண்டு என்பதுதான் எல்லா மடத்துக்கும் உடன்பட்ட செய்தி. சங்கர மடத்துக்கு அப்படி கிடையாது. சங்கர மடத்துக்கு வேதம்தான் தெய்வம். உருவ வழிபாடே இல்லாத ஒரு மதம். இந்த ஸ்மார்த்த மதம். எனவேதான் இவர்கள் யாரும் இன்றைக்கும் எந்தக் கோயிலிலும் அர்ச்சகராக இருக்க முடியாது. சங்கராச்சாரியாருக்கும் காமாட்சியம்மன் கோயிலில் கும்பிடத்தான் உரிமையே தவிர மூலத் திருமேனியைத் தொடுவதற்கோ அர்ச்சனை செய்வதற்கோ எந்த உரிமையும் கிடையாது.
மடங்களெல்லாம் சாதி சார்ந்தனவா?
ஆம். தத்துவம் என்று பெயருக்கு வெளியிலே சொன்னாலும் எல்லா மடங்களின் பொருளாதார வளங்களும் ஏதோ ஒரு சாதிக்குரிய சொத்துதான். ஜீயர் மடங்கள் எல்லாம் வைணவப் பிராமணர்களுக்குரிய சொத்து, திருவாவடுதுறை மடமும், தருமபுர மடமும் சைவ வேளாளர்களின் சொத்து. இது போன்ற வேறு சில சாதியார்கள் விஸ்வகர்மா போன்றோர் - ஒன்றிரண்டு இடங்களில் மடம் வைத்திருக்கிறார்கள். எல்லா மக்களுக்கும் எல்லாச் சாதியினருக்கும் உள்ள மடம் என்று தமிழ்நாட்டிலே எதுவும் கிடையாது. யார் அங்கு தீட்சை பெறுகிறார்களோ, தீட்சை பெற யாருக்கு உரிமை உள்ளதோ அவர்கள் மட்டுமே அங்கு உரிமை பெறுகின்றனர். சங்கரமடம் தீட்சைக்கு அப்பாற்பட்ட மடம். அங்கு தீட்சையே கிடையாது தங்களுடைய அடியார்களுக்குக் கூட தீட்சை கொடுக்கும் மரபு கிடையாது. அடுத்துப் பட்டமேறுகிறவர்களுக்கு மட்டும்தான் சன்னியாச தீட்சை கொடுப்பார்கள். பெண்களுக்குத் தீட்சை தரமாட்டார்கள்.
இந்த மடத்திற்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது?
காலனி ஆட்சி வந்தபிறகு, காலனி ஆட்சியின் சட்டங்களாலும், அதன் பின்னர் வந்த ஒழுங்காற்றுச் சட்டங்களாலும் எல்லா மடங்களும் இந்திய அளவிலே தங்கள் அதிகாரத்தில் இருந்த சொத்துக்களை இழந்து கொண்டே இருந்தன. அவர்களுக்குப் பெரும்பாலான சொத்துக்கள் விளை நிலங்களாகும். காஞ்சி மடத்துக்கு விளைநிலங்களே கிடையாது. ஆகையால் பார்ப்பனரல்லாத சமூகத்தின் உறவும் கிடையாது. டத்தகைதாரர் சட்டம். வரன்முறைச் சட்டங்கள் இவற்றின் காரணமாக, நிலவருவாயை நம்பியிருந்த மற்றைய மடங்கள் வருவாயை இழந்து கொண்டே வந்தன. இந்த மடத்தில் ஆளுகைக்கு உட்பட்ட ஸ்மார்த்த பிராமணர்களும் மற்றவர்களும் இவர்களுக்குத் தட்சணை கொடுப்பது உண்டு. இன்றளவும் பணக்காரர்களும், தொழிலதிபர்களும் அப்படி