உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 45

ஒரு போதும் கருத்தியலை உருவாக்குவது என்பது பிராமணர்களால் மட்டுமே முடிந்தபோது அவர்கள் உருவாக்கிய கருத்தியல் அவர் பெரியவர், நடமாடும் தெய்வம், அவருக்குத் தெரியாததே கிடையாது என்று கையிலே கிடைத்த அதிகாரத்தை இந்த மடத்திடம் சேர்த்தார்கள். தமிழ்நாட்டிற்கு வெளியேதான் அவர்களது அரசியல் அதிகாரம் நிறைய இருந்தது. தமிழ்நாட்டிலே காமராசர், பக்தவச்சலம் ஆகி .யார், முதல்வராக இருந்தபொழுது இவர்களுக்கு அனைத்திந்திய அளவில் செல்வாக்கு இருந்ததே தவிர தமிழ்நாட்டில் கிடையாது. அதற்குப் பிறகு அவர் தேசாந்திரம் என்று சொல்லக்கூடிய யாத்திரை போனார். அதற்குப் பிறகுதான் அதிகாரம்பெருகிற்று. இன்னும் சொல்லப்போனால் ராஜாஜி காலத்திலும் டில்லியிலே பிரதமரின் அலுவலகமான சவுத் பிளாக் (தற்போது கூட கைதான ஜெயேந்திரர் மரியாதையுடன் நடத்தப்படவேண்டும் என்பதில் பிரதமர் அலுவலகம் செலுத்திய தனிக்கவனம் குறிப்பிடத்தக்கது) என்று சொல்லக் கூடிய அதிகார மையத்திலே தமிழ்நாட்டுப் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்ததாலும், இந்த மடம் அனைத்திந்திய அளவிலே அதிகாரத்தை விரித்துக் கொள்ள முடிந்தது. இந்த மூத்த சங்கராச்சாரியார் இறந்த பொழுது அவரது இறுதி ஊர்வலத்தை அரசு தொலைக்காட்சியில் சரியாகக் காட்டவில்லை என்று டில்லி அதிகார மையத்திலே தமிழ்நாட்டு பிராமண ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியிலே வருத்தம் ஏற்பட்டது. வைணவப் பிராமணர்கள், சிவப்பிராமணர்கள் என்று எல்லாரும் சங்கராச்சாரியார் பக்தர்களாக மாறிவிட்டனர். இவர்கள் கையில் நேரடியாக அரசியல் அதிகாரம் சிக்கிக் கொண்டது.
மறைந்த சங்கராச்சாரியாரை மகாபெரியவர் என்கிறார்களே? ஏன்?
பிராமணர்கள், எழுத்து ஊடகத்தை வளைத்துக் கொண்டதனாலே, அவர்களுக்கு மிக வசதியான அதிகாரம் செலுத்துகிற கோட்பாட்டு முறைமைகளைத் தேர்ந்தெடுத்துக் வார்த்தையைப் சின்ன கொண்டார்கள். பெரிய முதலாளியின் மகன் கோடீஸ்வரனாக இருந்தாலும் பணியாளனுக்கு 'சின்ன' முதலாளிதான். இவர்கள் மட்டும் அந்த சின்ன என்ற பயன்படுத்துவதில்லை. நீதிமன்ற ஆவணத்தில் மடாதிபதி என்றுதான் சிக்குடையார் (சிக்கவுடையார்) ஒருகாலத்தில் இருந்தது. இவர்கள் பெரியவர் என்று சொன்னால் அவர்கள் வாரிசைச் சிறியவர் என்று சொல்வது தானே உலகத்தில் நடைமுறை. கோடீசுவரக் குடும்பங்களிலும் அதுதான் நடக்கிறது. ஆனால் ஆனந்தவிகடன், கலைமகள், கல்கி இவர்களெல்லாம் அந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/46&oldid=1677882" இலிருந்து மீள்விக்கப்பட்டது