தொ.பரமசிவன் 69
1950களில் தமிழ் தேசியக் கருத்தியலின் மறு உயிர்ப்புக்குக் காரணமானது மொழிவழி மாநிலப் பிரிவினையாகும். ஒரு தேசிய இனம் தன் நிலவியல் எல்லைகளின் மீது கொண்ட அக்கறையின் வெளிப்பாடாக தேவிகுளம் பீர்மேடு தமிழர்க்கே' என்ற முழக்கத்துடன் எழுந்த போராட்டத்தைக் குறிப்பிடலாம்.
ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம், சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் இயக்கம், தி.மு.க. பொதுவுடைமைக் கட்சி ஆகியவை ஓரணியில் திரண்டு நின்று நீதிக்கட்சியின் பழைய தலைவரான பி.டி.ராஜனைத் தலைவராகக் கொண்டு, கடையடைப்புப் போராட்டம் ஒன்றை நடத்தின. கண்டன ஊர்வலகத்தில் ஜீவானந்தமும் வெங்கட்ராமனும் காவல்துறையினரின் தடியடிக்கு ஆளாகிக் காயம் அடைந்தனர்.48 பெரியாரின் ஆதரவைப் பெற்ற பார்ப்பனரல்லாதார் ஆட்சி தயங்கித் தயங்கி ஆட்சிமொழிச் சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தை ஏற்க மறுத்தது. பார்ப்பனரல்லாதார் ஆட்சியைக் காப்பது என்ற பெயரில் பெரியார் எடுத்த நிலைப்பாடுகள் தமிழ்த் தேசியத்திற்கு உரமூட்டுவதாக அமையவில்லை. 1965இல் தமிழ் மாணவர்கள் மத்தியில் எழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் மைய அரசின் வல்லாண்மையைக் குறிக் கொண்டு தாக்கிய போராட்டமாகும். வாக்கு வங்கி அரசியலுக்கு ஆட்பட்ட திராவிடக் கருத்தியலாளர்களின் கட்டுக்களையும் கைகளையும் மீறி எழுந்த நெருப்பாகும் அது.
இன்று அதன் கனல் துண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. பஞ் சாப், அஸ்ஸாம், காஷ்மீர், ஜார்க்கண்ட, போடோ, சட்டிஸ்கர் என வடமாநிலங்களில் தேசிய இன உணர்வுகள் அரும்பி வருகின்ற நேரத்தில் அனைத்திந்திய தேசியத்திற்கு மாற்றாக ஒரு தத்துவத்தை வளர்த்தெடுக்க தமிழ்நாட்டில் வாக்கு வங்கித் தலைவர்களால் இயலவில்லை.
பன்னாட்டு மூலதனங்கள் அணுகுண்டுக்குப் பதிலாக வணிக ஒப்பந்தங்களையும், துப்பாக்கிக்குப் பதிலாக தகவல் தொடர்பு. சாதனங்களைக் கையகப்படுத்திக் கொண்டும் பெருவாரியான மக்கள் திரளின் அரசியல் சமூக நலன்களைக் கொள்ளையிடுகின்றன. இது பற்றிய தன்னுணர்ச்சியினை இன்று தமிழ்நாட்டுப் புலமையாளர்கள் மட்டுமே பெற்றிருக்கிறார்கள்.
தமிழ் தேசிய எழுச்சியின். அடையாளமாகக் கருதப்பட்ட தைப்பொங்கல் விழாவில் தொலைக்காட்சியில் சங்கராச்சாரியார் அருளாசி வழங்குகிறார். தகவல் தொடர்புச் சாதனங்களின் வழி