உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 71

6. அ.மா.சாமி, 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள் ப.131
7. அ.மா.சாமி, மேலது.. ப,300
1. திராவிட கோகிலம்
2. திராவிட பாண்டியன் (1885)
3. திராவிட பாண்டியன் (1896)
4. திராவிட பானு
5. திராவிடப் பிரகாசிகை
6. திராவிட தீபிகை
7. திராவிட நேசன்
8. திராவிட மந்திரி
9. திராவிட மித்திரன்
10. திராவிட ரஞ்சனி
11. திராவிட வர்த்தினி
12. திராவிட வர்த்தமானி (1882)
13. திராவிட வர்த்தமானி (1884)
திராவிடம் என்ற சொல் தமிழ் தென்கலை வைணவப் பார்ப்பனர்களுக்கு உகந்த சொல்லாகும். பொதுவாக நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தையும் குறிப்பாக நம்மாழ்வார் பாடல்களையும் திராவிட வேதம் என அவர்கள் அழைப்பார்கள். நம்மாழ்வாரின் திருவாய்மொழி 'திராவிடோபநிஷத்' என அவர்களால் அழைக்கப்பட்டது. இந்த வைணவ மரபின் தொடர்ச்சியாக 1914இல் டி.கே.சீனிவாச ஐயங்கார் என்பவர் திராவிட பாகவதம் என்ற பெயரில் இதழ் ஒன்றை நடத்தியுள்ளார். வைணவ மரபிற்கு பாகவத மார்க்கம் என்ற பெயரும் உண்டு.
திராவிட நேசன் என்ற பெயரில் 1891 தஞ்சையிலிருந்து சைவ மாத இதழ் ஒன்று வெளிவந்திருக்கிறது. 18ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட சிவஞான முனிவரின் பேருரையினை திராவிட மாபாடியம் என்ற பெயரில் சைவர்கள் வழங்கியிருக்கிறார்கள். அந்த மரபின் தொடர்ச்சியிது. சங்கரர், மாத்வர், இராமானுசரின் மாபாடியங்களுக்கு எதிராக அமைந்த மாற்றுப் பெயர் அது.
8. R.Sundaralingam. Politics and National awakening in south india (1852-91). The University of Arizona Press, 1974 P.42 & 143
9. R.Sundaralingamdop.51
10.R.Sundaralingamdop.51
11.R.Sundaralingamdop.51
12.R.Sundaralingamdop.295
13.R.Sundaralingamdop.298
14.R.Sundaralingamdop.296

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/72&oldid=1703911" இலிருந்து மீள்விக்கப்பட்டது