உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 75

ஒரு சனநாயக் நாட்டில் மொழிச் சமத்துவமும், பிறப்புச் இயலாது. ஏற்படாதவரை முழுமையான சமத்துவம் மலர பார்ப்பனிய எதிர்ப்பு என்பது மனித சமத்துவத்துக்கும், சனநாயகத்துக்குமான தேடலாகும்.
அண்மைக் காலமாக காஞ்சி சங்க்ராச்சாரியாரும் அவரைக் கொண்டு கலாச்சார அரசியல் நடத்துபவர்களும் இந்து என்ற கூட்டுக்குள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். கிறித்தவரல்லாத, இசுலாமியரல்லாத எல்லா மக்களுக்கும் இவரே ஆன்மீகத் தலைவர் என்பது போல் அவருக்கு 'முடிசூட்டி' பெருந்திரளான தமிழர்களை ஏமாற்ற முற்படுகின்றனர். அவர்களது மாயாவாத சித்தாந்தம் எல்லா அரசியல், சமூக அதிகாரங்களையும் மீண்டும் பார்ப்பனிய வன்முறை வலைக்குள் கொண்டு வரப் பார்க்கின்றது. சைவம், வைணவம், நாட்டார் தெய்வங்கள் ஆகிய அனைத்தையும் பார்ப்பனியம் தின்று தீர்க்கப்பார்க்கிறது. இந்தச் சூழ்நிலையில் சமூக வரலாற்றுக் கல்வி ஒன்றே நம்மைக் காப்பாற்றும்.
பிறப்பு வழிப்பட்ட பார்ப்பனியத்தினை மட்டும் எதிர்ப்பதில்லை இந்த வெளியீட்டின் நோக்கம். பார்ப்பனியக் கருத்தியலை ஏற்றுக் கொண்ட பார்ப்பனர் அல்லாதவர்களும் மறுப்புக்குரியவர்கள். ஆராய்ச்சியாளர்கள் இவர்களைப் புதிய பார்ப்பனர்கள் (Neo-Brah- mins) என அழைக்கின்றனர். நிகழ்காலத்தில் எல்லா ஊடகங்களையும் பார்ப்பனியக் கருத்தியல் தனதாக்கிக் கொண்டது. பார்ப்பனியம் என்பது ஒரு பண்பாட்டு வல்லாண்மை என்ற கருத்தை முன் வைத்தே இந்த வெளியீடு உண்மையான சனநாயகத்திற்காகக் குரல் கொடுக்கின்றது.
பார்ப்பன பார்ப்பனிய எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் இயக்கம், திராவிடர் இயக்கம், தமிழின விடுதலை நோக்கிலான அமைப்புகள் போன்றவற்றினால் காலந்தோறும் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. ஆனால் இன்றைய நிலையில் பார்ப்பனிய எதிர்ப்பையும், பெரியாரையும் ஒரு காலத்தில் எதிர் மதிப்பீடு செய்த மார்க்சியவாதிகளும் மார்க்சிய லெனினிய அமைப்புகளும் பார்ப்பனியத்தின் புதிய பரிமாணத்தைப் புரிந்து கொண்டு பார்ப்பனிய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர்.
இதற்கு மறுதலையாக வடநாட்டில பாரதீய ஜனதாவின் செயல்பாடுகளும். தமிழ்நாட்டில் செயலலிதா ஆட்சியின் செயல்பாடுகளும், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி தமிழ்நாட்டில் காலூன்ற ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/76&oldid=1703929" இலிருந்து மீள்விக்கப்பட்டது