உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 'இந்து' தேசியம்

(ஆற்று நீர்ப்பாசனம் பெறும்) நீர் வளம் நிறைந்த பகுதிகளிலேயே குடியிருந்தனர். இன்றும் ஓரளவேனும் நீர்வளம் உடைய தஞ்சை, பார்ப்பனர் எண்ணிக்கை திருச்சி, நெல்லை மாவட்டங்களிலே மிகுதியாகும் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.
பார்ப்பனர்கள் பிறப்பினால் உயர்ந்தவர்கள் என்றும் தேவ தூதர்கள் என்றும் சித்தரித்து பார்ப்பனர்களால் புனையப்பட்ட மனுநீதி, புராண இதிகாச கதைகளை புனிதமானவை என்றும் இவைகளைச் சொர்க்கத்தின் படிக்கட்டுகளாகவும் காட்டி அவைகளைப் பற்றிய ஒரு மாயையை தோற்றுவிப்பதில் பார்ப்பனர் கண்ட வெற்றியானது ஏனைய தமிழ்ச் சாதியார் பார்ப்பனர்களையும், வடமொழி புனிதத்தையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள வைத்தது. மூடக்கதைகளின் வாயிலாகப் பார்ப்பன நலன்களையே முழுவதும்போற்றிய இக்கலாச்சார வெற்றியே இன்றுவரை பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைப் பாதுகாக்கும் அரணாக உள்ளது.
தமிழக மக்கள் தொகையில் பார்ப்பனர் 3% உள்ளனர் என்ற புள்ளிவிபரம் வழி வழியாகச் சொல்லப்படுகிறது. இந்த புள்ளி விபரக் கணக்கைப் பார்ப்பனர்களே மறுக்காது ஏற்றுக் கொள்கின்றனர். அறிஞர்கள் தமிழ்நாட்டு மக்களைச் சாதி வாரியாகப் பகுத்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கி ஒன்றரை நூற்றாண்டு காலமாகிறது. இருப்பினும் பெருமளவு கல்வி வசதி பெற்ற பார்ப்பனச் சாதியாரைப் பற்றிய ஆய்வு நூல்கள் ஒன்றுகூடத் தமிழில் இல்லை. 75 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய (History of Sri Vaishava Brahmins) என்ற நூலும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ந.சுப்பிரமணியன் (ஐயர்) எழுதிய (Brahmins in the tamil coun- try)என்ற நூலும் ஓரளவு பார்ப்பனர்களைப் பற்றிய சில செய்திகளை அறிய உதவுகின்றன. இவை தங்களை மிக உயர்ந்த சாதியாகவும் வடமொழியோடு இணைந்தவர்களாகவும் ஏனைய தமிழ்ச் சாதியார் ஏற்றுக் கொள்ளுமாறு ஆக்கப்பட்டன. இது ஒரு வரலாற்று உண்மை. இருப்பினும் தங்களைத் தனி நாகரிகமுடைய சாதியார்களாகக் காட்டிக் கொள்ளும் பார்ப்பனர்களுக்கென்று ஒரு தனிமொழி இல்லை என்பதும் வரலாற்று உண்மையே: தமிழ். தெலுங்கு, கன்னடம் என்ற வட்டார மொழிகளையே வீட்டு மொழிகளாகப் பார்ப்பனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பார்ப்பனர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தது குறித்த ஆரியச் சார்புக் கொள்கை ஒன்றும் திராவிடச் சார்புக் கொள்கை ஒன்றும் படித்தவர்கள் மத்தியிலே இருந்து வருகின்றன. மூன்றாவது ஒரு கோட்பாட்டையும் பார்ப்பனரான பேரா. எஸ். இராமகிருஷ்ணன் முன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/79&oldid=1708870" இலிருந்து மீள்விக்கப்பட்டது