இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
யார்? யார்? யார்?
தொங்க விட்ட சட்டையைத்
தூக்கிக் கீழே போட்டவன்
யார், யார், யார் ?
எழுதி வைத்த தாள்களை
இங்கும் அங்கும் இறைத்தவன்
யார், யார், யார் ?
சன்னல் கதவைப் பட்டெனச்
சாத்தி விட்டுச் சென்றவன்
யார், யார், யார் ?
அருகில் நிற்கும் மரங்களை
அசைத்தே ஆடச் செய்தவன்
யார், யார், யார்?
‘உஸ் உஸ்' என்று மெல்லவே
ஊதி ஊதிச் செல்பவன்
யார், யார், யார்?
கண்டு
பிடிக்க
முடியுமா ?
காண
முடியாக்
காற்றேதான் !