பக்கம்:இனியவை நாற்பது-மூலமும் உரையும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


காஞ்சி, ஆசாரக் கோவை, இன்னிலை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது. கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, திணை மொழி ஐம்பது-என்பன.

தமிழ் நூல்கட்குள்ளே தலையாய பதிணென் கீழ்க்கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பதன் காரணம், அடியளவால் சிறியனவாகிய - அதாவது - இரண்டே அடிகளை உடைய சிறு சிறு பாக்களை உடைமையேயாகும். பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றாகத் திருக்குறளோடு ஒத்த வரிசையில் வைத்து எண்ணப் பெறுதலின், நாற்பது என்னும் நூலும் சிறந்தது என்பது புலனாகும்.

பெயர்க் காரணம்:

இந்நூலில் கடவுள் வாழ்த்துப் பாடலை அடுத்து நாற்பது பாடல்கள் உள்ளன; ஒவ்வொரு பாவிலும் இனிய - இன்பம் பயக்கும் செய்திகள் - செயல்கள் பல எடுத்துக் கூறப்பெற்றுள்ளன; அதனால் இந்நூல் இனியவை நாற்பது என்னும் பெயர் பெற்றது. இந்நூலின் முப்பத்தொன்பது பாடல்கள் நான்கடி வெண்பாவாலும் 8 ஆம் பாடல் மட்டும் ஐந்தடி வெண்பாவாலும் யாக்கப்பெற்றுள்ளன.

நூலாசிரியர்:

சங்க காலத்தைச் சார்ந்த இந்நூலின் ஆசிரியர்,