பக்கம்:இன்னமுதம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 е - இன்னமுதம் பொருந்துமாறு கைகளால் தொழுதால், கல்லையே துணையாகக் கட்டி (கல்லோடு கட்டி) கடலில் எறிந்தாலும் (அப்பொழுதும்) 'நமச்சிவாய' என்ற அவ்வைந்து எழுத்து நல்ல துணையாக அமையும்” (சொல்துணைவேதியன்-சொல்லின்பொருளான வேதியன்; சோதி வானவன் பரஞ் சோதியாய் உள்ள அழியாத வீட்டு உலகினன்; பொன்துணை திருந்து அடி- பொன் அடி, துணை அடி, திருந்து அடி; பொருந்த-கை வணக்கத்தோடு மனமும் பொருந்தச் செய்யும் வண்ணம்; கல் துணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்- ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலம் ஆகிய கல்லோடு இருவினை என்று சொல்கின்ற கயிற்றால் கட்டிப் பிறவிக் கடலில் வீழ்த்தப்பட்ட உயிர்கள் நமச்சிவாய என்னும் மந்திரத்தைக் கொண்டு பிறவியைப் போக்கலாம்.) இல்லக விளக்கது இருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே. "இவ்வுடம்புக்குள்ளே விளக்கமாக அமர்ந்திருப்பது; அக இருளைக் கெடுப்பது; சொல்லின் உள்ளே நின்று விளங்குவது; சோதியாக உள்ளது; கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உள்ளே நின்று விளங்குவது; எல்லா சமயத்தாரும் காணும் முறையில் அமைந்தது. ஞான ரூபத்தில் உள்ளே விளங்கும் விளக்காவது நமச்சிவாய' என்பதே ஆகும். (இல்-வீடு; அதாவது உடம்பு; சொல் அக விளக்குசொல்லின் பொருளாக நின்று விளங்குவது; பல் அக விளக்குபல உயிர்களுக்கும் துணையாக உள்ளது; நல் அக விளக்குஞானம்நிறைந்த உள்ளத்தின் உள்ளே தோன்றும் விளக்கு.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/40&oldid=747043" இலிருந்து மீள்விக்கப்பட்டது