பக்கம்:இன்னமுதம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 е இன்னமுதம் "மனம் என்னும் தோணியைப் பிடித்து, அறிவு என்ற கோலை ஊன்றி, சினம் என்னும் சரக்கை ஏற்றி, பாசம் என்ற கடலின்கண் தோணியைச் செலுத்தும்போது, மன்மதன் என்ற பாறை தாக்கி, அத்தோணி அழியும்போது, உன்னை அறிகின்ற அறிவு இன்றி வருந்துவேன். ஆதலால், ஒற்றியூரை உடைய தலைவனே! உன்னை உணர்கின்ற உணர்வை நல்குவாயாக!” (செறி கடல்- பாசமாகிய கடல்; மதன்-மன்மதன் காமம் என்னும் பாறை; மறிதல்- அழிதல்; உன்னை உன்னும்அகங்காரம் அழிந்து உன்னையே நினைக்கின்ற) திருவொற்றியூரில் வியாகரண மண்டபம் என்ற ஒரு மண்டபம் உண்டு. அதில் இலக்கண விவாதம் நடைபெறும். அதனால் இறைவனுக்கு எழுத்தறியும் பெருமான் (வியாகரணம்இலக்கணம்) என்று பெயர் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/42&oldid=747045" இலிருந்து மீள்விக்கப்பட்டது