பக்கம்:இன்னமுதம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 е இன்னமுதம் சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம் பலத்துநட்டம் என்றுவந் தாய்என்னும் எம்பெரு மான்தன் திருக்குறிப்பே 'இறைவன் திருவடியில் பதித்த நெஞ்சோடு இடைவிடாது நினைத்துப் பாருங்கள்; உங்கட்கு ஒருவிதமான குறையும் வராது; கோபத்தோடு வந்த எமனை மார்க்கண்டேயனுக்காக இரங்கிக் காலால் உதைத்தவனும், தில்லையுள் சிற்றம்பலத்தில் ஆடுபவனும் ஆகிய கூத்தனுடைய நடனத்தைச் சென்று தொழுங்கள்; அப்பெருமானுடைய கவித்த திருக்கை "என்று வந்தாய்" என்று கேட்பதுபோல் குறிப்புக் காட்டி இருக்கின்றது.” (ஒன்றியிருந்து- ஒருமுகப்பட்ட மனத்தோடு, ஊனம்-குறை, குற்றம்; கன்றிய-கோபத்தோடு வந்த; எமனை; அடியவர்க்காமார்க்கண்டேயனுக்காக)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/44&oldid=747047" இலிருந்து மீள்விக்கப்பட்டது