பக்கம்:இன்னொரு உரிமை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் புறாக்கள்117

நோக்கி வட்டமடித்தது. அதற்கும், அந்த ஆண்புறா அசைந்துகொடுக்காமல் இருந்ததைப் பார்த்துவிட்டு, இதற்கும் ஒரு வைராக்கியம் திரும்பிப் பாராமலேயே பறந்தது.

உயரே பறந்துகொண்டிருந்த புறாச்சிறுமிக்கு மேலே ஒரு உருவம் தென்பட்டது. அதன் நிழலில் பார்வை சற்று மங்கியது. புறா இனத்தின் எதிரியான வைரிக்குருவி, இப்படி ஆகாயத்தில் இரைக்கு மேல் பறந்து தனது நிழலை வைத்து அதை திக்குமுக்காட வைத்து, இறுதியில் கொன்றுவிடும் என்பதை அதன் உள்ளுணர்வு உணர்த்தியது. ஆகையால் பயந்துபோய், கூக்குரலிட்டபடியே, தாழப்பறந்து அது ஓலமிட்டபோது, அதற்கு இணையாக ஒன்று பறந்தது. “அடடே நீயா? நீதான் இப்படி பயப்படுத்திட்டியா? சரி வா! அம்மாகிட்ட போகலாம்!”

அந்த இரண்டு புறாக்களும், தாங்களே ஆகாயத்தில் ஒரு சொர்க்கத்தை சிருஷ்டித்துக்கொண்டே போவதுபோல் ஒன்றையொன்று சிணுங்கிச் சிணுங்கிப் பார்த்தபடியே பறந்தன. அந்தரங்கமான காதலை அந்தரத்தில் விடப்போவதில்லை என்பதுபோல் நூலிழைகூட பிசகாமல் ஒரே சீரில் பறந்தன.

காட்டுப்புறாவும், வீட்டுப்புறாவும் அந்த வீட்டின் கூரை மேல் ஜோடியாக உட்கார்ந்தன. பிறகு சேர்ந்தாற்போல் ஒரு மாமரத்தின்மீது குவிந்தன. அந்தப்புறா, இன்னும் வராதது கண்டு தலையில் கை வைத்தபடியே புறாக்கூட்டின் பக்கம் நின்ற கும்மாளம்மா அதைப் பார்த்த உடன் வரவேற்பதுபோல் கையை ஆட்டினாள். அங்கே வந்த லுங்கிக்காரனிடம் அது கூட்டி வந்திருக்கும் ஜோடியைக் காட்டினாள். உடனே அவன் ஏதோ சொல்ல, இவள் அடிக்கப்போவதுபோல் கையை ஓங்கினாள். “வா வா அம்மாகிட்ட போகலாம்” என்று புறாச்சிறுமி சொன்னதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/126&oldid=1368896" இலிருந்து மீள்விக்கப்பட்டது