பக்கம்:இன்னொரு உரிமை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சின்ன மனிதர்கள் 233

போனார். அப்போது பார்த்து “குட்மார்னிங்” என்று சொல்லிக்கொண்டு, ஒரு பேட் மார்னிங் டைப்பிஸ்ட் பெண் உள்ளே வந்தாள். ஜான்சன் சமாளித்துக்கொண்டார்.

மோகனா மறுநாள் காலையில் வழக்கம்போல் அலுவலகம் வந்தபோது, வாட்ச்மேன் வைரவன் ஒரு நாற்காலியில் வீராப்புடன் உட்கார்ந்திருந்தான். அவளையும், சுவர்க்கடிகாரத்தையும் மாறி மாறிப் பார்த்தான். அவள் துடைப்பத்தை எடுத்துப் பெருக்கப்போனபோது, இவன் வாயெடுத்துப் பேசினான்.

“ஏழரை மணிக்குப் பெருக்கறதுக்கு இப்ப வந்தா எப்படி? நேத்து மேஜையைத் துடைக்காமல் போயிட்டே. இன்னையிலிருந்து பாத்ருமையும், டாய்லெட்டையும் கழுவி விடணும்!”

“அதுக்குத்தான் வேற ஆளு இருக்குதே!”

“அதைப்பற்றி ஒனக்கென்ன? உன்னால முடியுமா முடியாதா? எனக்கு இப்பவே தெரியணும்.”

“மோகனா அவனை நேருக்கு நேராய்ப் பார்த்தாள்.”

“இந்தாப் பாருய்யா வாட்ச்மேன்... நான் மட்டும் மனசு வச்சால் உன்னை அடுத்த வாரமே இந்த ஆபீஸை விட்டுத் துரத்த முடியும். என்னை அழிச்சுக்கிட்டே உன்னையும் அழிக்க முடியும். நான் ரெண்டையும் விரும்பல. ஆனா இப்ப ரெண்டுல ஒன்னைத் தீர்மானிக்க வேண்டியது ஒன்னோட பொறுப்பு. என்ன சொல்றே? எனக்கு இப்பவே தெரியணும்.”

வைரவன் வாயடைத்துப்போனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/232&oldid=1369431" இலிருந்து மீள்விக்கப்பட்டது