பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12.வந்தான் மகிழே!

 பைந்தமிழ் முறையே பயின்றவர் பாடல்போல் வந்தது, புகுந்தது வயலிடை யாறு!
நிரம்பிய குளத்தே நிமிர்ந்தன மலர்கள்!
மரமெலாம் பூத்தது கிண்செடி பூத்தது!
வயலெலாம் நீலம்! வரப்பெலாம் குவளை!
அயலெலாம் உதிர்ந்த அழகுப் பூக்கள்!
பன்மணி நிறைந்த பசுமைப்பட் டாடை
தன்உழைப் பின்றியே மற்றவர் உழைப்பில்
உண்டு களிப்போர்க் குதவும் வண்டுகள்!
மண்டிப் புதுப்பூ வலம்வந் திசைக்கும்! செங்கண் சிறுகுயில் எங்கும் விளிக்கும்!
அங்குள மாந்தளிர் அரிவையர் மேனியே!
சிந்திய தாதுகள் மகளிர்மெய்த் தேமலாம்!
வந்தது தென்றல் மலரிடைப் புகுந்தது!
வந்தது நறுமணம் இளவேனில் வந்ததே!

செடிமலர் சிதறிய சிறுபாறை மேல்மயிலும் அடிபெயர்த்(து) ஆடியே அகவலால் எனைஎள்ளும்! அடிபெயர்த்(து) ஆடிமயில் அகவலால் எனஎள்ள விடுவதுதான் அன்பென்றல், மெலியும்உடல்!

(யார்தடுப்பார்?