உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

இன்ப

குணா: அக்கிரமம்! அநீதி! இப்போதுதானே திருமுடியாரின் திருவிளையாட்டைத் தடுத்து—அரசுக்குப் பாதுகாப்புத் தேடித் தந்திருக்கிறார்! அதற்குள்ளாகவா இந்த அக்கிரமம்! இருக்க முடியாது! ஏதோ தவறு நடந்திருக்கிறது!

[ஓடுகிறான் அரண்மனையை நோக்கி.]

காட்சி—37

[தெருவில் கூட்டம் கூட்டமாக மக்கள் பேசிக் கொள்கின்றனர். ஒரு கூட்டத்தில்...]

ஒருவன் : அறிவானந்தரைச் சிறையில் போட்டுவிட்டார்களாமே!

2–வது: எவ்வளவு தங்கமானவர்.

3–வது: ஏழை எளியவர்களென்றால், எதையும் கொடுக்கத் தயங்கமாட்டார்!

1–வது: எனக்குக் காய்ச்சல் வந்து கவனிப்பாரற்றுக் கிடந்த பொழுது, அந்த மகான்தான் காலையும் மாலையும் வந்து மருந்து கொடுத்துக் காப்பாற்றினார்! கண்கண்ட தெய்வம் என்றால், அது அவர்தான்!

2–வது: ஆமாம்; அந்த நல்லவரை இவர்கள் ஏன் சிறையில் போடுகிறார்கள்.

3–வது: நல்லவராக இருப்பதே இந்த அரசாங்கத்தில் தப்பு போலிருக்கு!

[குணாளனுடன் ஒரு கூட்டம் வேகமாக வருகிறது. தெருவிலிருந்து சிறு சிறு கூட்டங்கள் அதனுடன் செல்கின்றன.]

காட்சி—38

[அரண்மனை வெளிப்புறம். மக்கள் கூட்டம் கூச்சலுடன் படிக்கட்டுகளில் ஏறுகிறது. விக்ரமன் வந்து மேல் மாடத்தில் நிற்கிறான். ஏறிவந்த கூட்டம் அப்படியே நிற்கிறது. கூச்சல் அடங்கி, அமைதி ஏற்படுகிறது.]

விக்ர: என்ன கூச்சல் இங்கே!