114
இன்ப
பொழுதும் கேட்கிறேன். குடிமக்களைச் சாட்சியாக வைத்துக் கேட்கிறேன்! திருநாட்டுப் படைக்கு உதவியளிப்பீரா, மாட்டீரா?
அறி: முடியாது...?
விக்: நீங்களே கேட்டீர்கள், அவர் மறுப்பதை! நான் எதிர்பார்த்த உதவி அப்படியொன்றும் கடினமானதல்ல! அவர் செய்த ஆராய்ச்சியை நமது நாட்டுக்காகப் பயன்படுத்த முயன்றேன்! நாட்டுக்காக உங்களில் பலர் மகத்தான தியாகங்களைச் செய்திருக்கிறீர்கள்! அதோ, அந்த வீரன் கையிழந்தான். எதற்கு? நாட்டைக் காப்பாற்ற! அவன் கண்களை இழந்தான், இவன்காலை இழந்தான், அவன் முகத்தில் ஏராளமான வடுக்களைத் தாங்கினான்! நாட்டுக்காக நமது வீரர்கள் செய்துள்ள தியாகங்கள் எவ்வளவு! கண் இழந்தோர், கரமிழந்தோர், களத்திலே தமது உயிரையே காணிக்கையாகத் தந்தவர்கள் எண்ணற்றோர். அவ்வளவு பெரிய தியாகங்களைக் கூட நான் இவரிடம் எதிர்பார்க்கவில்லை! காலைத்தா என்று கேட்டேனா? கண்ணைத்தா என்று கேட்டேனா? சமர்க்களத்தில் மதயானையை எதிர்த்து நில்லுங்கள் என்று அனுப்பினேனா? இல்லை, நீங்கள் செய்த ஆராய்ச்சியை நாட்டுக்கு உதவுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்! அந்தச் சிறு உதவியைக்கூட முடியாது என்று கூறிவிட்டார், இந்தப் பெரியவர்!
கூட்டம்: பெரியவரா? துரோகி, துரோகி!
விக்ர: நாடு வெற்றி பெற வேண்டாமா? திருநாட்டு வீரர்கள் வெற்றி வீரர்களாகப் பவனி வரவேண்டாமா என்று கேட்டேன் நான்! வேண்டாம் என்கிறார் இந்த நல்லவர்!
கூட்: நல்லவரா? நாட்டுக்குத் துரோகம் செய்யும் நாசகாரர்!
விக்: நாட்டுக்கு உதவ மறுத்த இவரை, திருநாட்டுப் படைகள் வெற்றி காணுவதைத் தடுக்கும் இவரை, நான் கைது செய்தது குற்றமா?
கூட்: இவரை இதுவரை விட்டு வைத்திருப்பது குற்றம்!
ஒருவன்: கடுந்தண்டனை கொடுக்க வேண்டும்!