உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

இன்ப

தள: (வெறிக் கொண்டவனாக) கேட்கப் போவதில்லை! கேட்கவும் மாட்டேன். கேடுகெட்ட உன் தலையைத் துண்டாடிக் கொண்டுபோய் கோட்டைச் சுவர்மீது வைக்கிறேன். துரோகம் பாடம் பெறட்டும்!

[ஆத்திரத்துடன் வாளை ஓங்குகிறான். கார்மேகம் கொஞ்சம் நகர, குறிதவறி கை துண்டாகிறது. ஓடத் தொடங்குகிறார். துரத்திக் கொண்டு போய், பிடித்து நிறுத்தி— 'உயிர் பிழைக்கலாம் என்று ஓடுகிறாயா, நீசனே' என்று தலையை வெட்டிச் சாய்க்கிறான்.]

காட்சி—40

[ஆய்வுக்கூடம். குணாளன் சோர்வுடன் அமர்ந்திருக்கிறான். நெற்றியிலும், கையிலும் கட்டுகள் போடப்பட்டிருக்கின்றன. திருமதி, குணாளனுக்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். மணிவண்ணன் ஆத்திரத்துடன் பேசிக் கொண்டிருக்கிறான்.]

மணி: குணாளா! விக்ரமனின் கொடுமைகள் அளவு கடந்து கொண்டிருக்கின்றன! எந்தத் திருநாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக இரவு பகல் பாராது, மழை வெய்யில் கருதாது அரும்பாடுபட்டரோ, உன் தந்தை, அவரையே துரோகியென்றும், வஞ்சகர் என்றும் வசைகூறத் தொடங்கிவிட்டார்கள் நன்றி கெட்ட மக்கள். திருமுடியாரின் தீ விளையாட்டைத் தடுத்து நிறுத்தியபோது எந்த வாயால், 'அறிவானந்தர் வாழ்க' என்று வாழ்த்துக் கூறினார்களோ அவரையே 'ஒழிக்' என்று உரக்கக் கூறுகிறார்கள்! உலுத்துப் போன உள்ளத்தினராய். குணாளா, என் அருமை நண்பா! பாதுகாவலனின் அடுத்தத் திட்டம் இனி நம்மீது குறி வைப்பதாகத் தானிருக்கும். நம் அனைவரையுமே கைது செய்து சிறையிலடைத்துவிட்டு, 'அரசாங்கத்துக்குச் சொந்தம், அரசாங்கத்துக்குச் சொந்தம்' என்று உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறானே நாசப்பொடியை, அதனை அதிகாரத்தின் வலிவோடு அபகரித்துக் கொள்ள இந்நேரம் திட்டம் தீட்டியிருப்பான்.