உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

இன்ப

போயிருக்கிறாள். உண்மை வெளிப்பட்டு, மக்களின் ஆத்திரம் தன் மேல் திரும்புமுன் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கருதி, நாசப் பொடியை, விக்ரம பூபதிக்குக் கொடுத்துவிட வேண்டுமென்று துடியாய்த் துடித்தாள்! எனக்குக் கூறியபடி ஆயிரம் வராகனும் கொடுக்கவில்லை. இதன் காரணமாக எனக்கும் மாலதிக்கும் தகராறு எழுந்தது. இரண்டு நாளைக்கு முன்பு, தகராறின் முடிவில் மாலதி உயிரோடு விடப்படக்கூடாது என்ற நிலைமை எனக்கு ஏற்பட்டது! நான் திருடிக் கொண்டு வந்தேன் என்பதை அறிவானந்தரிடம் கூறிவிடப் போவதாக அச்சுறுத்தினாள்! அதன் காரணமாகவே அவளைக் கொன்றுவிட நினைத்தேன். பெண்ணுருவில் இருக்கும் பேய் அவள். எங்களுக்குள் கை கலப்பு ஏற்பட்டது. நான் எதிர்பாராத வகையில், நாசப் பொடியை என் மீதே தூவி விட்டாள்! துடித்தேன்! துவண்டேன்! வெறி உணர்ச்சி மிகுந்துவிட்டது. நான் கொடுத்த நாசப் பொடியால், என்னையே நாசமாக்கிவிட்டாள். ஒரே பாய்ச்சல்! அந்த உல்லாசியின் உயிர், ஒரு கணத்தில் போய் விட்டது! நச்சுப் பொடிக்கு, மாற்றுப் பொடி வேண்டும் என்று தவித்தேன். பெற முடியவில்லை மணிவண்ணா! மாலதி சேமித்து வைத்திருந்த பொன் நாணயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்! என்னை மன்னித்துவிடு!

என்று மடியில் வைத்திருந்த இரகசியக் குறிப்பைக் கொடுத்து—'இதையும்கூட நான்தான், குறிப்பேட்டிலிருந்து கிழித்துக்கொண்டு வந்தேன்!'

என்று தன் கையில் வைத்திருந்த ஒரு பெட்டியை அவன் காலடியில் வைத்துவிட்டு—

'மன்னித்துவிடு மணிவண்ணா! என்னைக் காப்பாற்று! எரிச்சல் தாங்கமுடியவில்லை!' என்று துடிக்கிறான்.

மணி: மாதவா? அனுதாபப்படுகிறேன், உன் விபரீதமான கதையைக் கேட்க! எவ்வளவு பெரிய பாதகத்தை இந்த நாட்டுக்குச் செய்யவிருந்தாய் என்பது புரிகிறதா? அறிவானந்தர், தம் நாசப் பொடியை திருநாட்டுக்குத் தர