ஒளி
157
குமார: பேரன்புக்குரிய குடிமக்களே! என் முன்னிலையிலேயே இவ்வளவு பெரிய கொடுமையைச் செய்துவிட்டீர்கள். அறிவானந்தர் கொலை செய்யப்பட்டது பற்றி நானும் வருத்தம்தான் கொள்கிறேன்...
மணி: அரசே! அநீதிக்கு இடம் கொடுத்துவிட்ட அற்பத்தனம், விக்ரமனை ஆக்கிரமித்துக் கொண்டது. அறிவின் ஆற்றலை, அழிவின் ஆற்றலோடு இணைத்துப் பார்த்து இறுமாப்புக் கொண்டான் விக்ரமன். அதன் விளைவு இது...
குமார்: ஆனாலும்...
குணா: அக்ரமக்காரன் அழிக்கப்படுவதிலே, ஆனாலும் என்பதற்குப் பொருளில்லை மன்னா! ஆகவே என்று கூறி இருக்க வேண்டும்.
மணி: அரசே! அறிவானந்தரின் ஆராய்ச்சி வெற்றி கண்டது. இல்லாதார் ஏற்றம் பெறவும், வறட்சி வளமை காணவுமான நிலைமை இனி ஏற்படுத்த முடியும் என்ற இன்பச் செய்தியை அறிவானந்தருக்கு அறிவிக்க ஓடோடி வந்தோம்! அதற்குள்...
குமார: என்ன! ஆராய்ச்சி வெற்றி கண்டதா? கவலைக்கிடையே மகிழ்ச்சியடைகிறேன் குணாளா!
குணா: மகிழ வேண்டிய என் தந்தையை மதோன்மத்தன் கொலை செய்துவிட்டானே மன்னா!
குமார: உங்கள் வெற்றியின் மூலம் அறிவானந்தர் சாக மாட்டார். காலமெல்லாம் அவர் பெயர் நினைவில் நிற்கும்.
"அறிவானந்தர் வாழ்க!
குமாரவேலர் வாழ்க!
குணாளன் வாழ்க!
மணிவண்ணன் வாழ்க!"