பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒளி 159

குமா: நல்லது! உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் திருநாட்டுக்குச் சேரட்டும்! இன்றுமுதல் திருநாட்டுக்கு என்று ஒரு மன்னன் இல்லை. மக்களே அரசர்கள் மக்களே அமைச்சர் கள். மக்களது விருப்பு வெறுப்புக்களே இந்நாட்டு சட்டங் கள், திட்டங்கள்! குணாளரே, நீங்கள் அறிவானந்தரின் சார்பில் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்-- பாதுகாவலராக! (என்றதும் "குணாளன் வாழ்க" என்ற குரல் விண் எட்டுகிறது]

எப்போதும்போல் மணிவண்ணன் இன்னும் புதிய ஆராய்ச்சி -களில் ஈடுபடட்டும்! [என்றதும் **மணிவண்ணன் வாழ்க" என்ற வாழ்த்து எழுந்து அடங்குகிறது. திருமதி, குறும் புடன் பார்க்கிறாள் மணிவண்ணனை. மணி வண்ணனும், குணாளனும், திருமதியும் மன்னரை வணங்குகின்றனர்.]

குமார: (கூட்டத்தைச் சுட்டிக் காட்டி) வணங்கப்பட வேண்டியவர்கள் மக்கள்! நாமெல்லாம் அவர்களை வணங்கு வோம்! திருநாட்டின் ஒளியாக, இன்ப ஒளியாக இருப்பவர் கள் மக்கள்! நாடும், மக்களும் நாளெல்லாம் திளைக்கட்டும், அறிவானந்தரின் அறிவு ஒளியில்! இன்ப ஒளியில்! (கூட்டத்தை நோக்கி கைகூப்புகிறான் குமாரவேலன்] 'குமாரவேலர் வாழ்க!" {என்ற குரல் விண் எட்டுகிறது. மக்கள் விழிகளில் "இன்ப ஒளி' பரவத் தொடங்குகிறது.)