ஒளி
17
அறிவா: ஆமாம் குணாளா! உலகுக்கே பொதுவான அந்தப் பிணி அகற்றப்பட்டுப் போனால், அதற்கொரு மருந்தினைக் கண்டுபிடித்து விட்டால், தனக்கு—தனக்கு என்பதோ, தமக்கு—தமக்கு என்பதோ என்றுமே ஏற்படாதே!
திரு: பசிப்பிணியைச் சொல்கிறீர்களா அப்பா!
அறிவா: ஆமாம்! பசித்துக் கிடப்பவர்களைப் பார்க்கும்போது என் இதயத்திலே ஒரு வலியேற்பட்டு விடுகிறது. அந்தப் பசி இருக்கிறதே திருமதி. அது, அந்தப் பிணி கொண்டவர்களை மட்டுமல்ல, அதனைக் கண்டவர்களைக்கூட வாட்டி வதைத்து விடும். திருமதி! தீரமாகப் போரிட்டுவிட்டுத் திரும்பியிருக்கிறான் அண்ணன்! திண்ணை வேதாந்தம் பேசிக்கொண்டிருக்கிறோம் நாம்! போய் பால், பழம் எடுத்து வாம்மா!
அறி: சடையப்பா! நாலு நாளைக்கு வயலில் இறங்கி வேலை செய்யக் கூடாது என்கிறேன். கேட்கமாட்டாயா? இப்போதுதானே வீக்கம் வடிய ஆரம்பித்திருக்கிறது. அதற்குள் வேலைக்குப் போகலாமா? கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு அப்புறம் வேலை செய்தால்தான் என்ன?
சடையப்பன்: நாலு நாளைக்கா? முடியாதுங்களே ஐயா! பண்ணையார் கண்டிச்சுச் சொல்லிவிட்டாரே, செத்துப் போறதா இருந்தாக்கூட, பண்ணை வீட்டு வாசல்லே வந்து சாவுன்னு! ஏழைகளாச்சே நாங்க! இதெல்லாம் முடியுங்களா?