ஒளி
31
கலனாகிவரும் கோபுரங்களைப் புதுப்பித்து, புணருத்தாரணம் செய்து, கும்பாபிடேகம் செய்துவைக்க வேண்டுமென்றால், கருவூலம் காலியாக இருக்கிறது. புது வரிகள் விதிக்கிறேன். நிரம்பட்டும் பொக்கிஷம்—நினைத்துப் பார்க்கலாம் என்கிறார் விக்ரமர்! நாடு, காடாக வேண்டும். கடவுளின் கடாட்சம் இல்லாது போகவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?
ஒரு பெரிய: அதை எப்படி அனுமதிக்க முடியும்? ஆண்டவன் இட்ட பிச்சைதானே அரசும், மன்னனும். கேட்கத்தான் வேண்டும், அரசரிடம்.
இன்னொரு பெரியவர்: நாட்டின் வரிப்பணம், நாட்டு மக்களுக்காகத்தான்! போர் வெறியர்களின் போர் முழக்கத்துக்கல்ல!
திரு: என்று மன்னனிடம் கேளுங்கள், மன்னனை வைத்து விளையாடும் விக்ரமனிடம் கேளுங்கள்! விபரிதம் விளையாடி—திருநாட்டைத் தீய்க்குமுன் கேளுங்கள் மன்னரிடம்!
அனை: கேட்கத்தான் வேண்டும்! கேட்கத்தான் போகிறோம்.
திரு: போய்க் கேட்டுவிட்டு வாருங்கள். மன்னனுக்காக மக்களா? மக்களுக்காக மன்னனா என்று கேளுங்கள். அரசன் ஒரு குழந்தை; அறியாச் சிறுவன்! ஆட்டிப் படைப்பவனிடம் கேளுங்கள்! போங்கள்.
விக்ர: (வந்துகொண்டே) ஆட்டிப் படைப்பவனே வந்திருக்கிறேன், கேளுங்கள். திருமுடியாரே! கேட்கச் சொல்லிச் சொல்லிக் கொடுத்தனுப்பினீர்களே, நீங்களே; கேட்கலாமே! மக்களுக்காக மன்னனா? மன்னனுக்காக மக்களா? கேட்க வேண்டிய கேள்விதான். திருமுடியாரே, கேட்டுக் கொள்ளுங்கள். மக்களுக்காக இருக்கிறான் மன்னன்; அந்த மன்னனுக்காக இருக்கிறார்கள் மக்கள். அவர்கள் இருவருக்குமாக