ஒளி
51
மணி: திருமதி! நேற்றிரவு, நீ தூங்கிவிட்டாய்! அப்பாவின் ஆராய்ச்சியில் புதியதொரு திருப்பம் ஏற்பட்டிருக்கிறது தெரியுமா?
திரு : என்ன, என்ன! புதிய திருப்பமா?
மணி: ஆமாம் திருமதி! ஒருவித பொடி கண்டுபிடித்திருக்கிறார். அதில் ஒருதுளியை எடுத்து ஒருவர்மேல் தெளித்தால் போதும்; பட்ட இடத்தில் ஆறாத இரணம் உண்டாகிவிடும். இந்தப் பொடியால் ஆபத்து அதிகம்!
திரு: (வருத்தத்தோடு) எனக்குப் பிடிக்கவில்லை, இந்தக் கண்டுபிடிப்பு!
மணி: ஏன் திருமதி?
திரு: அழிவுச் சக்திக்கு விஞ்ஞானப் படைப்புகள் பயன்படக் கூடாது என்பவர் அப்பா! அவரே அழிவுப் பொருள்களைப் படைக்கலாமா?
மணி: கூடாதுதான்—கண்டுபிடிப்பை அழிவுக்குப் பயன்படுத்த வேண்டுமென்பது குறிக்கோளானால்! இலட்சியம் அது அல்லவே! இலட்சியப் பாதையில் இப்படி ஒரு கண்டுபிடிப்பு! எதிர்ப்பட்டது இது! இதுவேதான் ஆக்கச் சக்திக்குப் பயன்படும் மூலப் பொருளாக இருக்கும்போது ஒதுக்கிவிட முடியுமா?
திரு: அப்படியா! அப்பாகூட எனக்கு இப்படியெல்லாம் விளக்கவில்லை.
மணி: அவர் உனக்கு எல்லாவற்றையுமே விளக்க முடியுமா? விளக்க வேண்டியதைத்தானே அவரால் விளக்க முடியும்! மீதியை...
காட்சி—19