பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒளி 53 குணா : (ஆராய்ச்சியைப் பார்த்தபடி) தேடியது மூலிகையை; கண்டுபிடித்தது மணிவண்ணனை; அப்படித்தானே! (திருமதியைத் திரும்பிப் பார்க்கிறான்; அவள் தலைகுனிந்து நிற்கிறாள்.) எச்சரிக்கையாக இருக்கவேண்டும் திருமதி! விளையாட்டுக் குழந்தை நீ. வாழ்க்கை என்பது விளையாட்டு அல்ல! எதிர் நீச்சலில் கரை சேரவேண்டிய ஓடர்! நினைவிலிருக்கட்டும்! காட்சி-20 (ஊர் மக்களில் சில பேர், அறிவானந்தரது புதிய கண்டுபிடிப்புப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டே போகிறார்கள். திருமுடியாரும், அறிவானந்தரது கண்டுபிடிப்புப் பற்றி பெருமூச்சு உகுக்கிறார். முத்து வணிகரும், மணிவண்ணனின் அண்ணனு மாகிய கார்மேகம் தனக்கு அந்தக் கண்டுபிடிப்பு வேண்டும் என்பதற்காக- எப்படிப் பெறுவது என்று கவலைப் படுகிறார். அரசவை வரையில் விஷயம் எட்டி, பாதுகாவலன் விக்ரமனுக்கும் தெரிய வருகிறது; விக்ரமனின் மூளை சுறுசுறுப் படைகிறது.) காட்சி--21 [அறிவானந்தரது ஆராய்ச்சிக் கூடம்! சில வீரர் கள் வந்து, அறிவானந்தரிடம் நின்று வணங்கு கின்றனர். அறிவானந்தர் ஒருவன் முதுகில் தட்டிக் கொடுத்து... அறி : என்ன தம்பி ! அரண்மனை வாசம் எப்படி இருக் கிறது? ஒரு : அரண்மனைக்குள்ளே எப்போதாவது அமைதி இருக்குமா பெரியவரே! அதுவும் பேராசையால் தாக்குண்ட வர்கள் இருக்கிற இடம் என்றால் அமைதி, அண்டி இருக்கக். கூட அஞ்சுமே! அறி: என்னமோ! இன்னும் கொஞ்ச நாள்! என் ஆராய்ச்சி வெற்றி பெற்று விட்டால் இவைகளுக்கெல்லாம்