உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

இன்ப

சிக்கு அரசாங்க ஆதரவு இனி அமோகமாகக் கிடைக்கும்; அமைச்சர் அருளானந்தரை உம்மிடம் அனுப்புகிறேன். திட்டங்களை அவரிடம் கூறுங்கள்.

அறி: விக்ரமா! உன் புகழ் பரவுவதாக!

[புறப்படுகிறார் அறிவானந்தர். விக்ரமனும் அமைச்சர் அருளானந்தரும் தனித்து இருக்கிறார்கள்.]

அரு: அந்தப் பைத்யக்காரக் கிழவனுக்காக நமது பொருளையெல்லாம் பாழாக்குவதா? யோசித்துச் செய்யவேண்டும் பாதுகாவலரே!

விக்ர: அவரைப் பைத்தியக்காரர் என்று நினைத்து வந்த நாம்தான் பைத்தியக்காரர்கள்! அவர் ஆராய்ச்சி செய்து ஒருவகைப் பொடியைத் தயாரித்திருக்கிறார்கள். அதைத் தூவினால் புண்கள் ஏற்படுகிறதாம். அந்த எரிச்சல் தரும் பொடி ஏராளமாக நமக்குக் கிடைத்துவிட்டால்...

அரு: கிடைத்துவிட்டால்...

விக்ர: போர் மூளும்பொழுது, எதிரிப்படை மீது தூவச் செய்வேன்! புண்ணைத்தரும் அந்தப் புகைப் பொடியை எதிர்த்து யாரால் நிற்கமுடியும்? பின், நல்லநாடும், மருதூர் அரசும் நமக்கு அடிமைப்பட வேண்டியதுதான்! இந்த விக்ரமனுக்கு எதிராக எவராலும் நிற்க முடியாது! ஆண்டவனாலும் முடியாது. அவர் அடியாரான திருமுடியாராலும் முடியாது. ஆயிரக்கணக்கான வீரர்கள் தரும் பலத்தைவிட, அறிவானந்தர் தரும் ஒரு பிடி மருந்தில் அதிக பலம் இருக்கிறது! எவருக்கும் கிடைத்திடாத படைபலம் என்னிடம் சேர்ந்திருக்கிறது இப்பொழுது!

காட்சி—23

[சாந்து கொட்டப்படுகிறது. கல் அடுக்கப்படுகிறது. கட்டிடம் வளர்கிறது. விக்ரமனும் அறிவானந்தரும் பேசிக் கொள்கிறார்கள். வண்டிகளில் வந்து இறங்கும் புதுச் சாமான்களை எடுத்து வைக்கு

-