68
இன்ப
மாலதி! நிலைமை நெருக்கடியாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் வறுமையின் கொடுமையைத் தாளமாட்டாதவர்களாக, ஆண்டவனைக்கூட்ட அலட்சியப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். விக்ரமனின் சுட்டுவிரல் அசைவுகளே சட்டங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. நிலைமை நீடிக்குமானால், விக்ரமன் ஒரு சர்வாதிகாரியாகி விடக்கூடும். அதனால் மன்னர் குமாரவேலனுக்குக்கூட ஆபத்து ஏற்படலாம்...
மாலதி: உணர்ந்திருக்கிறேன், அடியார் அவர்களே! ஏற்பாடுகளைச் செய்திருக்கிறேன். ஆராய்ச்சிக் கூடம் புதிதாகக் கட்டப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்ட பிறகு, இரகசியங்கள், மிகுந்த பாதுகாப்புடன் இருக்கின்றனவாம். இரகசியங்களைக் காத்துக் கொண்டு, எந்த நேரத்திலும் குணாளன் விழிப்போடிருக்கிறானாம்...
திரு: மாலதி! அறிவானந்தரின் இப்போதைய ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. முன்பு கூறினேனே–அது. அதுதான் மாலதி, "நீரும் நெருப்பும்"! அதுவே தேவை. விரைவாகத் தேவை. ஏற்பாடுகளைச் செய்! ஏதேனும் தேவைப்பட்டால் ஆள் அனுப்பு.
மாலதி: எத்தனைச் சீக்கிரம் முடியுமோ அத்தனை விரைவில் முடிக்கிறேன். நம்பிக்கையுடன் போய் வாருங்கள்.