பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82 இன்ப

அவள் கண்டு விட்டாற்போல, முகம் மலர்ச்சியடைகிறது. அருகிலுள்ள பைகளையும், குறிப்பையும் எடுத்துக் கொண்டு உட்புறம் நோக்கிப் போகிறாள்.]

காட்சி--29

[மல்ல நாட்டு அரண்மனை. கார்மேகம் அனுப்பிய ஓலைச்சுருளை, அமைச்சர், அரசனுக்குப் படித் துக் காட்டுகிறார்.) அமை: திருநாட்டில் இருக்கும் நமது ஒற்றர் கார் மேகத்திடமிருந்து கடிதம் வந்திருக்கிறது அரசே! அரசர்: சொல்லிக் கொண்டிருக்கிறீர் அமைச்சரே ... படியுங்கள் விரைவாக! அமை: இரணப்பொடி பற்றிய இரகசியம் கிடைத்து விட்டதாம்! நாம் ஆராய்ச்சிக்கூடம் தொடங்கி, செய்ய வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு இரணப்பொடி அதிகமாகவே கிடைத்திருக்கிறதாம். படையுடன் எல்லைக்கு வந்து விட்டால் அங்கே பொடியுடன் வந்து தங்களைச் சந் திப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அர: கார்மேகம், கெட்டிக்காரர் ஆயிற்றே! சரியான ஆளைக் கண்டெடுத்துதான் அனுப்பி இருக்கிறீர் அமைச்சரே! வெற்றிப் பெருமை உமக்குத்தான்! தீய்ந்தது திருநாடு; ஒழிந் தனர், திருநாட்டு வீரர்கள்; சாய்ந்தது திருநாட்டின் கொடி; வீழ்ந்தது அவர்தம் காவல்மரம்! அமைச்சரே, தித்திப்பான இந்தச் சேதியைத் தெரிவியுங்கள், உடனே படைத்தலைவ ருக்கு! முழங்கட்டும் முழவு! ஒலிக்கட்டும் முரசு! அமை: அரசே! கார்மேகத்தைச் சந்திக்கு முன்னே, முடிவெடுப்பது... அரச: முட்டாள்தனமாகப் பேசாதீர்! பறை கொட்டச் சொல்லுங்கள்!ஓய்வு பெறச் சென்ற படைவீரர்களுக்கெல் லாம் ஓலை அனுப்பச் சொல்லுங்கள்! மல்ல நாட்டின் வெற்