பக்கம்:இன்ப வாழ்வு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இன்ப வாழ்வு


பகுதியை என்னென்றுரைப்பேன்! வேண்டாம் என்ற மனைவி கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றமா?’ என்று இரக்கமாகக் கேட்டாள். அத் தளர்ந்த சொல்லைத் தலைவன் கேட்டான். தலைவியின் வாடிய முகத்தையும் கண்டான். அவனால் தன் குற்றத்திற்கு நாணித் திருந்தாமல் இருக்க முடியவில்லை. இந்த நிகழ்ச்சியை,

‘'வேம்பின் பைங்காய் என்தோழி தரினே

தேம்பூங் கட்டி என்றனிர் இனியே பாரி பறம்பில் பணிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றணிர் ஐய! அற்றால் அன்பின் பாலே.’ என்னும் பழந்தமிழ்க் குறுந்தொகைச் செய்யுளால் உணரப் பெறலாம். அன்று தலைவனுக்குக் கசப்பும் இனித்தது. இன்றோ, தண்ணிய இனிய பறம்புமலைச் சுனைநீர் தைத் திங்களிலும் சுடுகிறது - உவர்க்கிறது. இப்படி உலகில் பலர் இருக்கின்றனர் என்று குறிக்கவே, ஒரு தலைவன்மேல் ஏற்றிக் கூறியுள்ளது குறுந்தொகைப் பாடல். எனவே, இனியாயினும் உலகில் குடும்பத்தலைவரும் தலைவியரும் தாம் காதலித்த - மணந்துகொண்ட அன்றுபோல் என்றும் ஒன்றிய ஒரே நிலை உள்ளத்தினராய் உவகையுடன் வாழ்வார்களாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/101&oldid=550668" இலிருந்து மீள்விக்கப்பட்டது