பக்கம்:இன்ப வாழ்வு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் சில நூல்கள் குறித்து ஒரு பார்வை

1. வீடும் விளக்கும். இது பேராசிரியர் சுந்தர சண்முகனாரின் முதல் நூலாகும். இது ஒரு வாழ்வியல் நூலாகும். இந்நூலுக்குப் பேராசிரியர் அ. சிதம்பரநாதன் அவர்கள் அளித்த மதிப்புரை ‘இந்நூலாசிரியர் வரைந் துள்ள தமிழ்நடை மிக்க எளிமையும் இனிமையும் வாய்ந்து பிழையில்லாமல் இருப்பது மனத்திற்கு மகிழ்ச்சி தருகின்றது. இனிய அழகிய தமிழில் இந்நூலை எழுதி வழங்கும் வித்துவான் சண்முகனார் அவர்கள் மேன்மேலும் இத்தகைய நூல்கள் எழுதி நம் இனிய தமிழகத்திற்குத் தொண்டாற்றிச் சிறப்ப்ெய்துவாராக ‘

2. தனித் தமிழ்க் கிளர்ச்சி: எழுதுதல், பேசுதல், திருமணம், திருக்கோயில் வழிபாடு, அரசியல் அலுவலர்கள் முதலிய பல துறைகளிலும் தமிழையே கையாண்டு, தமிழ்க்கே முதன்மையளிக்க வேண்டும். இந் நோக்கத்துடன் இந்நூல் எழுதப்பட்டதாக ஆசிரியர் தம் முன்னுரையில் கூறியுள்ளார். இது ஒரு அம்மானைப் பாட்டு நூலாகும். இந்நூலுக்குப் பாவேந்தர் பாரதிதாசன் சிறப்புக்கவி வரைந்துள்ளார்கள்.

3. செந்தமிழாற்றுப்படை இக் கவிதை நூலுக்காக நாவலர் ச. சோமசுந்தரபாரதி அவர்கள் சுந்தர சண்முகனார் அவர்களுக்கு இயற்கவி’ என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். இந்நூலின் கரு தமிழ் கற்ற ஒரு தமிழன், தமிழ் கற்காத மற்றொரு தமிழனைத் தமிழ் கற்றுத் தாய் நாட்டிற்குத் தொண்டு புரிவதற்காகத் தமிழ்த்தாயிடம் ஆற்றுப்படுத்தலாகும்.

4. தமிழர் கண்ட கல்வி: இந்நூலில் கல்வியின் இயல்பு, சிறப்பு, நன்மைகள், கட்டாயம், கற்கும் முறை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/178&oldid=550753" இலிருந்து மீள்விக்கப்பட்டது