பக்கம்:இன்ப வாழ்வு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இன்ப வாழ்வு


கையில் கொடுத்தாள். இது நல்ல தின்பண்டம், தின்று விடுங்கள்” என்றும் கூறினாள். அவனும் வாயில் போட்டுக் கொண்டான். அது அவனுக்கு மிகவும் இனித்தது! ஆகா! என்ன இனிப்பு என்று புகழ்ந்துகொண்டே மென்று தின்று விட்டான். தலைவியாலும் தோழியாலும் சிரிக்காமல் இருக்கமுடிய வில்லை. காரணம் என்ன? தலைவி தந்த தின்பண்டம் இனிப்பன்று; கசக்கும் வேம்பே. வேம் பென்றாலும் பழமன்று; பச்சைப் பசுங்காய். அது இனிப்பதாக ஒர் ஆண்மகன் தின்றால் எப்பெண்தான் சிரிக்காமல் இருக்கமுடியும்? யான் வேப்பங்காயை அல்லவோ தந்தேன் தாங்கள் இனிப்பதாகக் கூறுகிறீர்களே! என்று கேட்டாள் தலைவி, அல்ல அல்ல! நீயா எனக்கு வேப்பங்காயை அளிப்பாய்? சர்க்கரைக் கட்டியை அல்லவா அளித்தாய்? வேம்பென்று பொய் கூறிக் கேலி செய்கின்றாய் என்று தன் நம்பிக்கையைக் கூறினான் தலைவன். கேட்டாள் தலைவி. என்ன! நாம் கொடுத்த வேம்பும் இனித்ததாமே! ஆகா எவ்வளவு காதல் இவர்க்கு? என்றெண்ணி உடல் சிலிர்த்தாள்.

நாட்கள் பல நடந்து கடந்தன. காதலர்கட்குச் சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது. இருவரும் முறையே இல்லறம் நடாத்தி வந்தார்கள். ஒரு குழந்தைக்குத் தாய் தந்தையராகவும் ஆனார்கள்.

ஆண்டுகள் சில சென்றன. திடீரென அவன் குறிப்பு வேறொரு காமக் கிழத்திமேல் சென்றது. அப்புதிய அன்பு நாளுக்கு நாள் வளரத் தொடங்கிற்று. தன் மனைவியை மறந்தான். ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. உணவையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/99&oldid=550830" இலிருந்து மீள்விக்கப்பட்டது