176 அ.ச. ஞானசம்பந்தன் என்ற செய்தியைக் கேட்ட அரசக் கவிஞன் மனத்தில் இன்னது பாடவேண்டும் என்ற எண்ணம் கருக் கொண்டிருக்க முடியாது. அவனை உணர்ச்சி ஆட் கொண்டு இருந்தது. ஓரிரண்டு சொல்லும் பொருளும் அவன் மனத்தில் தோன்றியிருத்தல் கூடும். அவ்வுணர்ச்சி சிறிது சிறிதாகச் சொல் வடிவங் கொண்டு வெளிவருகின்ற நிலையில்தான்.பின்னர் வர வேண்டிய கருத்துகள் தோன்றும். ஆகவே, நகுதக்கனரே நாடு மீக்கூறுநர் (72) என்று கூறிய பிறகே, அவர்கள் நகுதற்குரிய காரணமும், அவர்கள் கூறிய சொற்களும், அதற்குத் தான் அளிக்கும் விடையும், தான் இனி ஆற்றவேண்டிய செயலும் ஒன்றன்பின் ஒன்றாய்த் தோன்றுகின்றன. இத்தகைய பாடல்களைப் படித்தவுடன், இவை கவிஞன் உள்ளத்தில் பொள் ளெனப் பொங்கிய பாடல்கள் என்பதும் ஏனைய பாடல்களைப் போல முயற்சி செய்து இயற்றப் பட்டவை அல்ல என்பதும் தெற்றென விளங்கும். இதனை ஷெல்லி என்ற மேலை நாட்டுக் கவிஞர், Spontaneous outburst argir pitb, 'Unpremeditated art 6Tsörgylä GM/6Ufr. Q)56MGMTGu Dr. Bradley, "It is a creation and not a manufacture and they possess the magical effect which decoration cannot produce srebrni Gips@pirir. Grcialaroj அணிகளை வைத்தாலும் செய்யுள் செய்யுளே. யமகம், திரிபு முதலிய செய்யுட்களிடத்து இத்தகைப் பேரானந்தத்தைக் காணவியலாது. அதற்கு மாறாக ஆசிரியனது வன்மையை வியக்கின்றோம். அதனோடு நின்று விடுகிறோம். இப் பாடல்களைப் படிக்கையில் ஆசிரியனை மறக்கின்றோம். அப்பாடல்களின் எதிரே' தலைகுனிந்து வணங்கி மகிழ்ந்து அதனை ஏற்றுக் கொள்கிறோம். - - - - -
பக்கம்:இன்றும் இனியும்.pdf/190
Appearance