பக்கம்:இன்றும் இனியும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 233 வந்தார் என்று பொருள்படும். அன்று இத்தகைய ஒரு மனோநிலையைக் களி என்ற சொல் குறிப்பிட்டது. இன்றைக்கு அந்தச் சொல் உயர்ந்து விட்டது. மிக உயர்ந்த பொருளை, "மகிழ்ச்சி என்ற கருத்தை அச்சொல் தெரிவிக்கிறது. இதில் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கில்லை. 'ஐ வியப்பாகும் என்றுதான் சூத்திரம் செய்து விட்டுச் சென்றான் தொல்காப்பியன். 'அட, எவ்வளவு பெரிய மனிதன்' என்று நாம்கூட ஒரு சிலரைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றோம். அப்படி வியந்த வுடனே நம்மை அறியாது என்ன செய்கிறோம்? கொஞ்சம் மரியாதை தருகிறோம். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? என் ஐ முன் நில்லன்மின் தெவ்வீர் என்ற குறட்பாவில் மதிப்புடைய ஓர் உயர்வுச் சொல்லாகத்தான் இருக்கிறது. பிறகு, நாளாவட்டத்தில் மதிப்புடைய பொருளையெல்லாம் அந்தச் சொல்லி னாலே குறிக்கின்ற சூழ்நிலை வந்தது. பெரிய புராணத்திலே சேக்கிழார் இந்த ஐயர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். யாருக்குத் தெரியுமா? அந்தணராகப் பிறந்த ஞானசம்பந்தருக்கன்று: நந்தனாருக்கு பெரிய புராணம் முழுவதிலும் ஐந்து இடத்திலே ஐயர் என்ற வார்த்தை; 4,268 பாடல்களில் ஐந்து முறை ஐயர் என்ற சொல் ஆளப்படுகிறது. நந்தனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்ற இரண்டு அரிசன அடியார்கட்கும் கண்ணப்பர் என்ற வேடருக்குமே ஐயர் என்ற பட்டம் வழங்கப்படுகிறது. - இனி, நந்தனாரை யார் ஐயரென்று சொன்னார் கள் தெரியுமா? தில்லைவாழ் அந்தணர்கள். -