பக்கம்:இன்றும் இனியும்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் தமிழும் 247 சமயம் இடம்பெறுகிறது எனக் காண்கிறோம். இதனை யடுத்துத் தோன்றிய திருக்குறளிலும் தனியொரு சமயத்தின் சாயல் இன்றிக் கடவுட் கொள்கையும் சமயமும் பேசப்பெறுதல்ை அனைவரும் அறிவோம். 'ஆதி பகவன் முதற்றே உலகு (குறள்-1), 'எண்குணத்தான் தாளை வணங்காத் தலை' (குறள்-9, 'கற்றதனாலாய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅரெனின் (குறள் -2) என்பன போன்ற குறள்கள், சமயம் இத் தமிழர் வாழ்வில் மிக ஆழமான ஒர் இடத்தைப் பெற்றுவிட்டமையையே அறிவிக் கின்றன. . - . இனி, இக் குறளுக்கு முன்னர் இருநூறு ஆண்டு களின் இடைப்பட்டுத் தோன்றிய சங்க இலக்கியங் களில் கடவுட் கொள்கையும் கடவுளர் பெயரும் விரிவாகப் பேசப்படுதலையும் அறியமுடியும். 'நீலமேனி வால் இழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே’ (ஐங்குறு-) என்ற பாடலிலிருந்து புறம், அகம் ஆகிய வற்றில் ஆங்காங்கே கடவுட் பெயர்கள் பேசப் படுதலைக் காண்கிறோம். இந்நிலையில் யாவற்றையும் கடந்து நிற்பதும், எங்கும் நிறைந்ததுமான முழுமுதற் பொருள் தனி மனிதனுடைய மன அளவில் காட்சி தரும் ஒன்றாகி வடிவும், உருவும், பெயரும் தாங்கி நிற்கின்ற நிலையையும் சங்கப் பாடலில் காண்கிறோம். எல்லாவற்றையும் கடந்து நிற்கும் முழுமுதற் பொருளாயினும் அப் பரம் பொருள் கருதுவான் அறிவின் எல்லைக்கேற்ப வடிவும் உருவுந்தாங்கி நிற்கும் தனிப்பட்டவன் வழிபடு கடவுளாகக் (PersonalisedGod) காட்சி தருவதைச் சங்கப்பாடல் அறிவுறுத்துகிறது. ஆலமர் செல்வன், முருகன், திருமால், கொற்றவை