பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பல்வேறு மொழிகளில் வெளிவந்து கொண்டிருக்கும் 'சந்தமாமா (அம்புலிமாமா) இதழின் ஆசிரியர் குழுவில் முக்கியப் பங்குகொண்டு பணியாறறி வந்தார். சுமார் முப்பதுக்கு மேற்பட்ட படைப்புக்களை உருவாக்கி யுள்ள இவர் நாவல் குறுநாவல்களை விட சிறுகதைகளை யே மிக அதிகமாக எழுதிக் குவிந்துள்ளார். இச்சிறுகதை களில் பெரும் பாலானவை வார மாத இதழ்களில் வெளி வந்தவைகளாகும். இவரது சிறுகதைகளில் பலவும் பதினைந்திற்கு மேற்பட்ட தொகுதிகளாக வெளிவந்துள் ளன. அவைகளுள் குறிப்பிடத் தக்கவை நிலவ நீரு” (நிலையான நீர்) "வேசி போயின மனுஷி (ஒடிப்போன பெண்) ஆட ஜன்ம (பெண பிறவி) முதலியனவாகும். ஆனால் இன்னும் எத்தனையோ சிறுகதைகள் நூல் வடிவம் பெறாமலிருக்கின்றன. இவரது புதினங்களுள் குறிப்பிட்டுக் கூறக்கூடியவை "பெதிரின மனுஷியலு (பயந்தாங்கொள்ளிை மனிதர்கள்) வார சத்வம் (மரபு) சதுவு' (படிப்பு) ஆகியனவாகும. இவைகளுள் 'சதுவு’ எனும் புதினம் இவரது வாழ்க்கைச் சாயலில் உருவானதாகும. அதோடு நாற்பது ஆண்டுகட்கு முன் பிருந்த விடுதலை இயக்கத்தின் வீறார்ந்த போக் கினையும், அன்றைய இளைய சமுதாயத்தின உள்ளத்தே பொங்கியெழுந்த தேசபக்தியுணர்ச்சியையும், தேசிய விழிப்பையும பல்வேறு வகைகளில் உருவெடுத்திருந்த விடுதலை இயக்கத்தின் போக்கையும் ஒருங்கே கூறுகிறது இப்புதினம். இவர் நாடகங்கள் பலவற்றையும் எழுதியுள்ளார். இந்நாடகங்களில் பெருமபாலானவை வா னொ லி நாடகங்களாகும். நாடக விழாவொன்றில் இடம் பெற்ற "சவதி தல்லி' (மாற்றாந் தாய்) எனும் வானொலி நாடகம், இவரது வானொலி நாடகங்களுள் குறிப்பிடத்