பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகழி சிவசங்கரப் பிள்ளை மகாகவி வள்ளத்தோலுக்குப் பிறகு இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகள் பலவற்றிலும் அறிமுகமாகி ஒங்கு புகழ் எய்தியுள்ள மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப்பிள்ளையே யாவார். மொழி, நாடு என்ற முறையிலேயே எழுத்துலகில் பெரிதும் மதித்துப் போற்றப் படுகிறார். பிறந்த ஊரின் தகழி என்ற சிறப்புப் பெயராலேயே அழைக்கப்படும் சிவசங்கரப்பிள்ளை கேரளாவிலுள்ள அம்பலப்புழாவிற்கருகிலுள்ள 'தகமி' கிராமத்தில் வேளாளர் குலத்தைச் சார்ந்த சங்கரக் குறுப்பிற்கும் பார்வதியம்மாளுக்கும் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி பிறந்தார். தகழி, அம்பலப்புழா, கருவாட்டா ஆகிய இடங்களில் தம் இளமைக் கல்வியை முடித்துக் கொண்ட அவர், பின்னர் திருவனந்தபுரத்திலுள்ள சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கரைஞர் (Pleader),படட்டம் பெற்று அம் புலப்பழாவில் வழக்குரைஞராகத்தொழிலைத் தொடங்கி னார். 1960ஆம் ஆண்டிற்குப் பின் அப்பணியைக் கை விட்ட அவர் இன்று எழுத்துப் பணியையும் உழவுப் பணி யையும் தன் இரு கண்களாகக் கொண்டு திறம்பட ஆற்றி வருகிறார். இளமையிலேயே கவிதை புனையத் தொடங்கிய தகழியின கலையார்வம் சிறுகதைகளையும் பின்னர் புதினங்களையும் எழுதத் தூண்டியது. இயற்கை யிலேயே கற்பனை வளமும் எ ழு த துத் தி ற ைம யும் வாய்க்கப் பெற்ற தகழியின் படைப்பாற்றலை ஒருமுகப்படுத்தி பூரணமாகப் பரிணமிககச் செய்தவர்