பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் கே. வி.புட்டப்பா கன்னட இலக்கியவுலகில் எழுச்சிமிக்கப் புத்திலக்கிய வளர்ச்சிக்கு இடையறா பெரும் பணியாற்றி வருபவர் களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் டாக்டர் கே வி. புட்டப்பா "குவெம்பு’ (Kபvempu) எனும் புனைபெயரில் அறிவாற்ற லோடு இலக்கியத் தொண்டாற்றி வரும் இவர் கணனட இலக்கியவுலகில் முதல் சாகித்திய அக்காதெமிப் பரிசு பெற்ற கணனட எழுத்தாளர் ஆவர். பூர் இராமாயண தர்சனம’ எனும் அப்பரிசு நூல் கனனட இலக்கியத் துறை யில் மின்னிப் பொழியும் தனி உருவாகும். சிறந்த இலக்கிய விற்பன்னராக விளங்கும் இவர் தலைசிறந்த கல்விக்குறை நிபுணர்களுள் ஒருவராகவும் இன்று மதிக்கப்படுகின்றார். மைசூர் பல்கலைக் கழகத்தில் கன்னட மொழிப் பேராசிரியராகவும் பின்னர் மகாராஜா கல்லூரி முதல் வராகவும் பணியாற்றிய இவர் இறுதியாக மைசூர்ப் பல் கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகித்தவர். விரல்விட்டு எண்ணத்தக்க சிறந்த கன்னடக் கவிஞர் களுள் ஒருவராய்த் திகழும் டாக்டர் கே வி புட்டப்பா இளமையில் எழுதத் தொடங்கியது ஆங்கிலக் கவிதைகளே யாகும். கன்னடத்தைப் போன்றே ஆங்கிலத்திலும் சமஸ் கிருதத்திலும் வங்காள மொழியிலும் புலமைமிக்க இவர் ஆங்கிலப் பாடல்களின உணர்வுத் தூண்டுதலால் பெரிதும் கவரப்பட்டு ஆரம்பக் கவிதைகள்' எனும் தலைப்பில் ஆங்கிலப் பாடல்களை அழகுறப் புனைந்து வந்தார். இவரிடத்து இயல்பாகப் பொங்கி நின்ற கவித்துவ உணர்