உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன முழக்கம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 எடுத்துப் புதைத்துவிட்டு "காந்திஜீ திடீரென்று புஷ்ப விமானத்தில் ஏறிச் சொர்க்கலோகம் போயி ருக்கிறார்" என்று புராணம் பாடி யிருப்பார்கள். மதவெறி செய்த சதி மறைக்கப்பட்டிருக்கும். வாழ்வை நந்தனை நாசமாக்கி - வள்ளலார் வெட்டி-சமணரைச் வெட்டி- சமணரைச் சாய்த்து இதுவரை இன்ப வாழ்வு நடத்தியதைப் போலவே இனியும் இந் தச் சதிகார மதம் வாழ, வழிகோலப்பட்டிருக்கும். ஆனால் காந்தியாரின் படுகொலை, இந்து மதத்தின் ரத்தம் தோய்ந்த நாக்கை, நமக். கெல்லாம் - இல்லை கெல்லாம்-இல்லை -நம் பேச்சைக் கேளாமல் இருப்பவர்க் கெல்லாம், படம் பிடித்து காட்டி விட்டது. இதற்காகத் தான் சொல்லுகிறோம் மதவெறியின் கடைசி இரையாக மாவீரர் காந்தி இருக்கட்டும் என்று! காந்தியாரின் சோக முடிவு பாம்புக்கு பால்வார்த்த கதை! எந்த வர்ணாஸ்ரமத்தைக் காக்க வழி வகுத் தாரோ அந்த வர்ணாஸ்ரமம் அவர் வாழ்வு குடிக் கும் பாம்பாயிற்று! எந்த இந்துமத சீர்திருத்தம் தேவை என பணிபுரிந்தாரோ அதே இந்து மதம் அவருக்கு இறுதியில் பரிசாக மூன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன_முழக்கம்.pdf/35&oldid=1701756" இலிருந்து மீள்விக்கப்பட்டது