பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

சுந்தர சண்முகனார்


நிலை மயக்கம்’ என்னும் ஒருவகைப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இப்பெயர் தரப்பட்டிருப்பதின் பொருத்தம் என்ன?

மொழிக்கு முதலில் வரக்கூடிய முதல்நிலை எழுத்துகளும், மொழிக்கு இறுதியில் வரக்கூடிய இறுதிநிலை எழுத்துகளும் இன்னின்னவை என்று கூறியிருப்பதால் மொழிக்கு இடையே இயைந்து - மயங்கி வரக்கூடிய எழுத்துக்களைப் பற்றியும் கூற வேண்டியதாயிற்று. இந்த மயக்கம் வடமொழியில் ‘சையோகம்’ என்று கூறப்படுகிறது.

2. தொல்காப்பியம்

இனித் தொல்காப்பியர் இடைநிலை மெய்ம்மயக்கம் பற்றி எழுத்ததிகாரம் நூன்மரபு என்னும் பகுதியில் கூறியுள்ள நூற்பாக்கள் வருமாறு:

“அம்மூவாறும்வழங்கியல் மருங்கின்
மெய்ம்மயங்கு உடனிலை தெரியுங்காலை” (22)

“டறலள என்னும் புள்ளி முன்னர்
கசப என்னும் மூவெழுத் துரிய” (23)

“அவற்றுள், லளஃகான் முன்னர் யவவும்தோன்றும்”(24)

“ஙளுண தமன எனும் புள்ளி முன்னர்த்
தத்தம் மிசைகள் ஒத்தன நிலையே” (25)

“அவற்றுள் ணனஃகான் முன்னர்க்
கசஞபம்யவ ஏழும் உரிய” (26)

“ஞநமவ என்னும் புள்ளி முன்னர்
யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே” (27),

“மஃகான் புள்ளிமுன் வவ்வும் தோன்றும்”(28)