பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

சுந்தர சண்முகனார்


முன்னர் யகரம் வரத் தான் கெட்டும், இறந்த காலம் பற்றி வரும்-என்று தொல்காப்பிய உரையாசிரியர் சேனாவரையர் கூறியுள்ளார்.

‘உ’ என்பது ‘இ’ எனத் திரிந்தது என்று சொல்வது பொருந்தாது. ஓடி, ஆடி, வருந்தி, திருந்தி, மயங்கி, தயங்கி என்பன போன்ற ‘இ’ ஈற்று இறந்த கால வினையெச்சங்களின் இறுதியில் உள்ள ‘இ’ என்பதை நீக்கிவிடின், ஓடு, ஆடு, வருந்து, திருந்து, மயங்கு, தயங்கு எனக் குற்றியலுகர ஈற்றுச் சொற்களையே காண முடியும். இவற்றின் இறுதியில் உள்ள ‘உ’ என்பது ‘இ’ ஆகத் திரியவில்லை. இந்தக் குற்றியலுகரங்கள் கெட, நிற்கின்ற ட், த், க் என்ற மெய் மேல் ‘இ’ ஏறி ஓடி, திருந்தி, தயங்கி என இறந்தகால வினையெச்சங்கள் உருவாயின.

செய் என்பதோடு பு, ஆ, ஊ என்பன சேரின் செய்பு, செய்யா, செய்யூ என்னும் இறந்த கால வினையெச்சங்கள் உருவாகின்றன. செய் என்பதோடு ‘உ’ சேரவேண்டுமாயின், கொய்து, கண்டு, சென்று என த் (த்+உ = து), ட் (ட்+ உ = டு), ற் (ற்+உ = று) என்னும் இறந்த கால இடை நிலைகள் ‘செய்' என்பதற்கும் 'உ' என்பதற்கும் இடையே வரும்.

செய்பு, செய்யா, செய்யூ என்பன போல, ‘இ’ என்னும் விகுதி சேர்த்து (செய் + இ =) ‘செய்யி’ என்னும் வாய்ப்பாட்டைப் புதிதாக உருவாக்கலாம்.

கொய், பெய் போன்ற வினைச் சொற்களின் அடிப்படையில் வாய்பாடு அமைக்காமல், ‘செய்’ என்பதன் அடிப்படையாகக் கொண்டு வாய்பாடு அமைத்திருப்பதின் காரணம், எல்லாத் தொழிலும் செய்யப்படுவது ஆதலின், என்க - எனவே, செய் என்பது வினைச்சொற்களின் பொதுப்