பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

23


இயற்றப் படவில்லை. இந்தப் பதர்கள் எக்கேடு கெட்டால் என்ன? இவர்தம் செயலால் ஆவதோ, அழிவதோ ஒன்றும் இல்லை. மன்பதையோடு (சமுதாயத்தோடு) இரண்டறக் கலந்து பழகாத இந்த மர மண்டைகள் செத்தவர்க்கு நிகர். செத்தவர் எவ்வாறு வந்து பழகமுடியும்? இவ்வாறு குறுக்கு வழியில் சுருக்கப் பெருமக்கள் ஆக முயல்கின்ற இன்னோர்க்காகவே,

“சிறியரேம் மதிக்கும் இந்தச் செல்வம் வந்துற்ற ஞான்றே
வறியபுன் செருக்கு மூடி வாயுளார் மூக ராவர்
பறியணி செவியுளாரும் பயிறரு செவிட ராவர்
குறியணி கண்ணுளாரும் குருடராய் முடி வரன்றே”

(பிறரை ஏறெடுத்துப் பாராமையால் குருடர்; பிறர் சொல்வதை மதித்துக் கேளாமையால் செவிடர்; பிறரிடம் பேசாமையால் ஊமையர்) - என்ற குசேலோபாக்கியானப் பாடலும்,

“பெருத்திடு செல்வமாம் பிணிவந் துற்றிடின்
உருத்தெரி யாமலே ஒளி மழுங்கிடும்
மருத்து உளவோ எனில் வாகடத் திலை
தரித்திரம் என்னுமோர் மருந்தில் தீருமே”

என்ற தனிப்பாடலும் எழுந்தன போலும். ஆனால், இக்குறள் எழுந்தது, நாட்டு மக்களின் தலையெழுத்தை விதிக்கின்ற நாட்டுத் தலைவனுக்காகவே யாம். மேலும் இக்குறள் எழுந்தது இந்தக் குடியரசுக் காலத்தில் அன்று; எல்லாம் வல்ல முடியரசர் காலத்தில். அங்ஙனமெனில், இக்காலை எப்படி நடத்து கொள்ள வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும்.

வேந்தன் எளியவனாய் இருக்க வேண்டும் என்றால் இளித்த வாயனாய் இருக்க வேண்டும் என்பதன்று; கடு கடுப்பு சிடுசிடுப்பு, விரம்-வேகம் எல்லாம் இருக்க வேண்டிய