பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரசிகமணி டிகேசி


கோருகிற அன்புக்கு நான் ரொம்ப நன்றி செலுத்துகிறேன். எனக்குத் தாங்களோடெல்லாம் கலந்து விழாவை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசைக்குக் குறைவில்லை. ஆனால், சென்னையிலுள்ளவர்கள் சென்னையில் நடக்கும் விழாவுக்கு நான் இருக்கவேண்டும் என்கிறார்கள். காரைக்குடியிலும் மூன்று நாள் பிரமாதமாக நடத்தப் போகிறார்களாம். அதற்கு நான் இருந்தே தீர வேண்டும் என்று அங்குள்ளவர்கள் சொல்லுகிறார்கள். இந்த விழாவெல்லாம் ஏப்ரல் மாதம் முதல் நடக்கும். காரைக்குடி நண்பர்களுடைய ஆர்வமும் அக்கறையும் அளவுகடந்ததாய் இருப்பதால் நான் அங்கு போவதுதான் பொருத்தம். தாங்கள் விழா வேறொரு நாளில் நடத்தினால் நான் வரக்கூடும். விளாத்திகுளம் படாகையில் எப்பொழுதும் கம்பராமாயண மணம் நிறைந்திருக்கும். திருநெல்வேலிக்கு மாறான கொள்கையுடையவர்கள் அங்குள்ளவர்கள் என்று சொன்னாலுங் குற்றமில்லை. அவர்களுடன் கலந்து கம்பர் விழா கொண்டாடுவதில் எவ்வளவு ஆனந்தம் ஏற்படும் என்று சொல்லவேண்டியதில்லைதானே.

இரண்டு வாரத்துக்குமுன் காரைக்குடிக்குப் போய் சில சொற்பொழிவுகள் தமிழ் சம்பந்தமாகவும் கம்பர் சம்பந்தமாகவும் செய்தேன். கேட்பதற்குப் பல ஊர்களிலிருந்தும் வந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் தமிழ், என்னால் காட்டப்படுவதால் அனுபவிக்கத்தக்கதுதான் என்று அபிப்ராயம் உண்டாய்விட்டது. அதிலிருந்து தமிழிடத்தில் புதுஆர்வம் பிறந்திருக்கிறது. செட்டிநாட்டில் அப்பேற்பட்ட உணர்ச்சி பிறந்துவிட்டால் அது எங்கும் பரவும். தமிழ் மகள் யோகந்தான் இது.

காரைக்குடியிலிருந்து திருநெல்வேலி தென்காசி வெள்ளகால் முதலான இடங்களுக்குப் போனேன். வெள்ளகாலில் வி.பி.எஸ். அவர்களைப் பார்த்து நாலைந்து மணி நேரம் பொழுது போக்கினேன். தங்கள் கடிதங்களையும்